உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு சுழற் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ரோட்டரி சங்கம்
உருவாக்கம்1905; 119 ஆண்டுகளுக்கு முன்னர் (1905)
வகைசேவை சங்கம்
தலைமையகம்ஈவன்ஸ்டோன், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா
தலைமையகம்
  • சர்வதேசம்
உறுப்பினர்கள்
1.22 மில்லியன்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், கொரியன், போர்ச்சுக்கள், ஸ்பானிஸ்.
தலைவர்
கேரி சி.கே. ஹுஹாங் (2014–15)
முக்கிய நபர்கள்
பவுல் பி. ஹரிஸ் (நிறுவணர்)
வலைத்தளம்www.rotary.org

பன்னாட்டு ரோட்டரி சங்கம் என்னும் பன்னாட்டு சுழற் சங்கம் (Rotary International) என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச் சங்கமாகும். இது உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, நிறம், இனம், மதம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு ஆகும். உலகம் முழுவதும் 34.282 சங்கங்களும், 1.2 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். [1] ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ரோட்ரியன்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு நாள் விருந்துடன் சந்திக்கின்றனர் அச்சமயத்தில் தங்கள் சேவை, இலக்குகள், பணிகள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்கின்றனர். ரோட்டரியின் முதன்மைக் குறிக்கோள் "தன்னைவிட மேலானது சேவை" என்பது; அதன் இரண்டாம் பொன்மொழி, "மிகச்சிறந்த இலாபம் என்பது சேவையே ஆகும்." என்பது[2]

.

வரலாறு

[தொகு]

முதல் ரோட்டரி சங்கம் உருவாக்கியவர் பால் பி ஹாரிஸ் என்பவராவார். மூன்று வர்த்தக நண்பர்களுடன் சிகாகோ நகரில் உள்ள டியர்பார்ன் தெருவில் உள்ள ஹாரிசின் நண்பர் கஸ்டவ் ஈ லோஹிர் என்பவரின் அலுவலகத்தில், பிப்ரவரி 23, 1905 அன்று கூடி சங்கத்தைத் துவக்கினர்.[3] In addition to Harris and Loehr (a mining engineer and freemason[4]) இச்சங்கத்துக்கு உறுப்பினர்கள் ரோட்டரி கிளப் என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். துவக்கத்தில் இவர்கள் ஒருவொருவர் அலுவலகங்களில் அடுத்த வந்த வாராந்திர சங்கக் கூட்டங்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டன. துவக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள், சிகாகோவில் சங்கம் வளர்ந்து பெரிய ஆனது இதனால் ஒரு பொதுவான இடத்தில் வாராந்திர கூட்டங்களை நடத்தத் துவக்கினர்.

அடுத்தடுத்த நான்கு ரோட்டரி சங்கங்கள் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு நகரங்களான சான் பிரான்சிஸ்கோ , பின்னர் ஓக்லாண்ட் , லாஸ் ஏஞ்சல்ஸ் , சியாட்டில் . ஆகிய இடங்களில் துவக்கப்பட்டன.அமெரிக்காவில் ரோட்டரி கிளப்புகள் தேசிய கூட்டமைப்பு 1910இல் உருவானது.22 பிப்ரவரி 1911 அன்று ரோட்டரி கிளப் டப்ளின் முதல் கூட்டம், அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே முதன் முரலில் சோட்டரி சங்கம் 1912இல் கனடாவில் வினிபெக் நகரில் நிறுவப்பட்டது.[5] [6] To reflect the addition of a club outside of the United States, the name was changed to the International Association of Rotary Clubs in 1912.[5]அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வெளியே சங்கங்கம் துவக்கப்பட்டக் காரணத்தால் சங்கத்தின் பெயர் 1912 இல் பன்னாட்டு ரோட்டரி சங்கம் என்று மாற்றப்பட்டது. [5]

ஆகஸ்ட் 1912 ஆம் ஆண்டில், ரோட்டரி சங்கம் வட அமெரிக்காவுக்கு வெளியே லண்டனில் முதன்முதலில் துவக்கப்பட்டது.[7]

கியூபாவில் 1916இலும், 1919 இல், பிலிப்பைன்சிலும், இந்தியாவில் 1920லும் சங்கங்கள் துவக்கப்பட்டன.

1925 களில், சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை 20,000 க்கும் மேல் தாண்டி சங்கங்களின் எண்ணிக்கையும் 200ஆக உயர்ந்தது. [8]

மேற்கோள்

[தொகு]
  1. "Presentation of the Rotary on their website". Rotary.org. Archived from the original on 2008-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-06-17.
  2. Modified by the 2010 "RI Council on Legislation," originally "He profits most who serves best" — see Rotary International, 2010 Report of Action online at [1].
  3. De Grazia, Victoria (2005). Irresistible Empire: America's Advance Through 20th-Century Europe. Cambridge: Belknap Press of Harvard University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01672-6. and Arnone Sipari, Lorenzo (2006). Spirito rotariano e impegno associativo nel Lazio meridionale: i Rotary Club di Frosinone, Cassino e Fiuggi, 1959-2005. Cassino: University of Cassino Press. p. 15.
  4. "Gus Loehr", Rotary International.
  5. 5.0 5.1 5.2 "Rotary Timeline". Archived from the original on 2013-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-27.
  6. Wikle, Thomas A. (Summer 1999). "International Expansion of the American-Style Service Club". Journal of American Culture 22 (2): 45. doi:10.1111/j.1542-734X.1999.2202_45.x. https://archive.org/details/sim_journal-of-american-culture_summer-1999_22_2/page/45. 
  7. "About the Rotary Club of London". Archived from the original on 2013-07-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-27.
  8. "History of Rotary International - History of Rotary International". Rotary.org. 1905-02-23. Archived from the original on 2008-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-06-17.