தன்மாத்ர (திரைப்படம்)
தன்மாத்ர | |
---|---|
இயக்கம் | பிலெஸ்ஸி |
தயாரிப்பு | இராசு மேத்யூ |
கதை | பிலெஸ்ஸி |
இசை | மோகன் சிதாரா |
நடிப்பு | மோகன்லால் அர்ஜுன் லால் நெடுமுடி வேணு ஜகதி ஸ்ரீகுமார் மீரா வாசுதேவன் பிரதாப் போத்தன் |
ஒளிப்பதிவு | சேது ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | இராஜா முகம்மது |
கலையகம் | செஞ்சுரி பிலிம்ஸ் |
விநியோகம் | செஞ்சுரி ரிலீஸ் |
வெளியீடு | 16 திசம்பர் 2005 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
தன்மாத்ரா ( மலையாளம்: തന്മാത്ര , ஆங்கில மொழி: Molecule ) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழி திரைப்படமாகும். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்ஸி எழுதி இயக்கிய திரைப்படமாகும்.[1][2] இது ரமேசன் நாயர் ( மோகன்லால் ) மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையில் அல்சைமர் நோயினால் ஏற்பட்ட தாக்கங்களை சித்தரிக்கிறது.[3] இப்படம் வணிக ரீதியாக மூன்று மடங்கு வசூல் குவித்து, 150 நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தன்மாத்ரா சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் அறிமுக நடிகர் அர்ஜுன் லாலுக்கான சிறப்புக் குறிப்பு (Special mention) விருது உள்ளிட்ட ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53 வது தேசிய திரைப்பட விருதுகளில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது.[4]
கதைச்சுருக்கம்
[தொகு]ரமேசன் நாயர் ( மோகன்லால் ) ஒரு கேரள அரசின் செயலக ஊழியர். தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நேர்மை மற்றும் ஒழுக்கமான மனிதர். ரமேசனின் குடும்பத்தில் அவரது அன்பு மனைவி லேகா ( மீரா வாசுதேவன் ), பிளஸ் டூ படிக்கும் மகன் மனு (அர்ஜுன் லால்) மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவியான மகள் மஞ்சு (பேபி நிரஞ்சனா) ஆகியோர் உள்ளனர். ஒரு சிறந்த மாணவராக இருந்தும் தன்னால் சாதிக்க இயலாத ஐ.ஏ.எஸ் ( இந்திய நிர்வாகப் பணி ) படிப்பில், தனது மகன் சேர வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய லட்சியம் ஆகும். மனு மிகவும் அன்பான மகன் மற்றும் ஒரு புத்திசாலி மாணவர். மனு தனது தந்தையுடன் மிகவும் பாசமாக இருக்கிறார்.[5]
ரமேசன் நினைவாற்றலில் சிக்கல்கள் உருவாகத் தொடங்குகிறது.கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி எனத் தொடங்கி, அறிவாற்றல் கோளாறு (cognitive impairments) மற்றும் நடத்தை குறைபாடுகள் (Behavioral impairments) என விரைவாக வளர்கிறது.
ரமேசன் தனது வீட்டில், குளிர்சாதனப் பெட்டிக்குள் மிக முக்கியமான அலுவலகக் கோப்பைத் தவறாகப் வைக்கும்போது இதை நாம் முதன்முறையாகக் கவனிக்கிறோம். ஒரு நாள் காய்கறி மூட்டையை வாங்கிக் கொண்டு அலுவலகம் வரும் அவர், அலுவலக நேரம் முடிந்து வீட்டை அடைந்தது போல் நடந்து கொள்கிறார். அவர் தனது நேரத்தையும் இடத்தையும் இழந்ததைப் போல அலுவலகத்தில் வித்தியாசமாக செயல்படத் தொடங்குகிறார். அவரை அவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பருமான ஜோசப் ( ஜெகதி ஸ்ரீகுமார் ) மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.
மருத்துவமனையில், ரமேசனுக்கு குடும்ப அல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை படிப்படியாக செயல் இழக்கச் செய்கிறது. இந்த செய்தி, மகிழ்ச்சியில் திளைத்த, குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களின் உலகத்தை தலைகீழாக மாற்றுகிறது. சோகமான இந்த செய்தியால் குடும்பம் நொறுங்கிப் போகிறது. பாசப்பிணைப்புடனும் தளராத உறுதியுடனும் இக்குடும்பம் இந்த இடரை எதிர்கொள்ள முனைகிறது. ரமேசனின் அல்சைமர் நோயால் ஏற்படும் அதிர்ச்சி, பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- ரமேசன் நாயராக மோகன்லால்
- லேகாவாக மீரா வாசுதேவன்
- மனு ரமேஷாக அர்ஜுன் லால்
- மஞ்சு ரமேஷாக குழந்தை நிரஞ்சனா விஜயன்
- ரமேசனின் தந்தையாக நெடுமுடி வேணு
- ஜோசப்பாக ஜெகதி ஸ்ரீகுமார்
- லேகாவின் அப்பாவாக இன்னசென்ட்
- லேகாவின் அம்மாவாக மங்கா மகேஷ்
- மருத்துவராக பிரதாப் போத்தன்
- ஸ்வர்ணமாக சீதா, ரமேசன் நாயரின் பால்ய தோழி
- ரமேசன் நாயரின் சக ஊழியராக லட்சுமிப்ரியா
- ரமேஷனின் அண்டை வீட்டு மகளாக நந்தினி
ஒலிப்பதிவு
[தொகு]தன்மாத்ர | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 25 நவம்பர் 2005 | |||
ஸ்டுடியோ | ரெவி, திரிசூர் | |||
இசைப் பாணி | திரைப்படம் | |||
இசைத்தட்டு நிறுவனம் | மனோரமா இசை | |||
இசைத் தயாரிப்பாளர் | செஞ்சுரி பிலிம் | |||
மோகன் சிதாரா காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்தின் இசையை மோகன் சித்தாரா மற்றும் பாடல்களுக்கு பாரதியார் ( காற்று வெளியிடை ) மற்றும் கைதப்பிரம் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல் கலவையை ரஞ்சித் விஸ்வநாதன் செய்துள்ளார்.[6][7][8]
தடம் | பாடல் தலைப்பு | பாடகர்(கள்) | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|
1 | "இத்தலூர்ன்னு" | பி.ஜெயச்சந்திரன் | ராகம் : கல்யாணி |
2 | "மிண்டாதேடி" | எம்.ஜி.ஸ்ரீகுமார், ஸ்ருதி | |
3 | "மேலே வெள்ளித்திங்கள்" | கார்த்திக் | ராகம் : மாண்ட் |
4 | "இத்தலூர்ன்னு" | மோகன்லால் | ராகம் : கல்யாணி |
5 | "மிண்டாதேடி" | சுஜாதா | |
6 | "காற்று வெளியிடை" | விது பிரதாப், ஷீலா மணி, டாக்டர் உன்னிகிருஷ்ணன், சுனில் | ராகம் : வளச்சி </br> பாரதியாரின் புகழ்பெற்ற கவிதை இது. செவ்வியல் பாடல் வரிகள் கைதப்பிரம் |
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்
[தொகு]இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[9]
விருதுகள்
[தொகு]- மலையாளத்தில் சிறந்த திரைப்படம் (தயாரிப்பாளர்) - ராஜு மேத்யூ
கேரள மாநில திரைப்பட விருதுகள்
- சிறந்த திரைப்படம் (தயாரிப்பாளர்) - ராஜு மேத்யூ
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த திரைக்கதை - பிளெஸ்ஸி
- சிறப்புக் குறிப்பு விருது - அர்ஜுன் லால்
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
- சிறந்த துணை நடிகர் - நெடுமுடி வேணு
- சிறந்த ஆண் பின்னணி பாடகர் : எம்.ஜி.ஸ்ரீகுமார்
- ஆண்டின் சிறந்த பெண் புதிய முகம் - மீரா வாசுதேவன்
- ஆண்டின் சிறந்த ஆண் புதிய முகம் - அர்ஜுன் லால்
- சிறப்பு நடுவர் விருது - ஜெகதி ஸ்ரீகுமார்
- சிறந்த குழந்தை கலைஞர் - பேபி நிரஞ்சனா
வனிதா திரைப்பட விருதுகள்
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகள்
- மிகவும் பிரபலமான நடிகர் - மோகன்லால்
அமிர்தா திரைப்பட விருதுகள்
- சிறந்த திரைப்படம் (தயாரிப்பாளர்) - ராஜு மேத்யூ
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
மாத்ருபூமி திரைப்பட விருதுகள்
- சிறந்த நடிகர் - மோகன்லால்
கேரள திரைப்பட ஆடியன்ஸ் கவுன்சில் விருதுகள்
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த நடிகர் - மோகன்லால்
- சிறந்த இயக்குனர் - பிளெஸ்ஸி
- சிறந்த குழந்தை கலைஞர் - பேபி நிரஞ்சனா
கலா கேரளா விருது
- சிறந்த நடிகர் - மோகன்லால்
தேசிய திரைப்பட அகாடமி விருது
- சிறந்த நடிகர் - மோகன்லால்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thanmatra".
- ↑ Sify review
- ↑ "Thanmathra review". Archived from the original on 18 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Thanmathra bag five state awards". Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
- ↑ "Thanmathra, a brilliant script". LiveJournal. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
- ↑ "Thanmathra Audio CD". AVDigital. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
- ↑ "Thanmathra - MSIDb". Malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
- ↑ "Thanmathra (Original Motion Picture Soundtrack)". Spotify. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
- ↑ "They too stirred up a hornet's nest: Pre-social media Malayalam films that sparked controversy". இந்தியன் எக்சுபிரசு. 18 February 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- Thanmathra at IMDb