உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டுக்காலியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்

எட்டுக்காலியியல் (Arachnology) என்பது, எட்டுக்காலிகள் எனப்படும் சிலந்திகள், தேள்கள் மற்றும் அவை போன்ற பிற உயிரினங்களைப் பற்றிய ஒரு அறிவியல் ஆய்வுத்துறை ஆகும். ஆனால் உண்ணிகள், சிற்றுண்ணிகள் போன்றவற்றை எட்டுக்காலியியல் பொதுவாக உள்ளடக்குவதில்லை. இவற்றை ஆய்வு செய்யும் துறை மென்னுண்ணியியல் எனப்படுகின்றது.

வகைப்பாடு

[தொகு]

எட்டுக்காலியியல் ஆய்வாளர்கள் எட்டுக்காலியியலாளர் எனப்படுவர். இவர்களைச் சிலந்தி வல்லுனர்கள் எனவும் அழைப்பதுண்டு. எட்டுக்காலிகளை வகைப்படுத்துபவர்கள் இவர்களே ஆவர். ஏராளமான எட்டுக்காலி இனங்கள் இருப்பதனால், இவற்றை வகைப்படுத்துவது என்பது இலகுவான வேலை அல்ல. இரண்டு இனங்களைச் சேர்ந்த எட்டுக்காலிகள் ஒன்று போலவே தோற்றமளிக்கும் அதே வேளை, ஒரே இனத்தைச் சேர்ந்த எட்டுக்காலிகள் வேறுபட்ட இயல்புகளை வெளிப்படுத்துவதும் உண்டு. இத்தகைய வேளைகளில் மாதிரிகளை அறுத்து நுணுக்குக் காட்டியின் கீழ் ஆய்வு செய்வதன் மூலமே அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

கார்ல் அலெக்சாண்டர் கிளார்க் என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன், முதல் எட்டுக்காலி இனத்தை விபரித்ததன் பின்னர், இன்றுவரை ஏறத்தாழ 40,000 எட்டுக்காலி இனங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன. இன்னும் விவரிக்கப்படாத எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனினும், இது 200,000 வரை இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். அறிவியலாளர்கள், புதிய புதிய இனங்களைக் கள ஆய்வுகளின்போது கண்டு பிடிப்பது ஒருபுறம் இருக்கச் சேமிப்பகங்களிலும் ஏராளமான மாதிரிகள் ஆய்வு செய்து விவரிப்பதற்காகவும், வகைப்பாட்டுக்காகவும் காத்திருக்கின்றன. அருங்காட்சியகக் காப்பகங்களில் கானப்படும் 200 ஆண்டுகளுக்கு முந்திய மாதிரிகள் சில உருச்சிதைவுக்கு உள்ளானபோதும் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

எட்டுக்காலி இனங்கள் பல அணுகமுடியாத இடங்களில் வாழ்வதனால், அவற்றின் நடத்தைகளைக் கவனித்து ஆய்வு செய்வது மிகவும் கடினமானது. இதனால், பெரும்பாலும் இறந்த பூச்சிகளிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள முடிகிறது. இதனால் எட்டுக்காலிகளின் நடத்தை பற்றிய ஆய்வு புறக்கணிக்கபட்டே வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டுக்காலியியல்&oldid=2742846" இலிருந்து மீள்விக்கப்பட்டது