உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னம்மா மேத்யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னம்மா மேத்யூ
பிறப்பு(1922-03-22)22 மார்ச்சு 1922
கோதாவரி மாவட்டம்,
ஆந்திரப் பிரதேசம்
இறப்பு10 சூலை 2003(2003-07-10) (அகவை 81)
கோட்டயம், கேரளம்
மற்ற பெயர்கள்திருமதி கே. எம். மேத்யூ
பணிவனிதா என்ற பெண்கள் இதழின் நிறுவனர், அதன் தலைமை ஆசிரியர்
அறியப்படுவதுசமையல் இலக்கியத்தின் ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
கே. எம். மேத்யூ

அன்னம்மா மேத்யூ (Annamma Mathew) (1822 மார்ச் 22 - 2003 சூலை 10) திருமதி கே. எம். மேத்யூ என்றும் அறியப்படும் இவர், வனிதா என்ற மலையாளப் பத்திரிக்கையின் நிறுவனரும் தலைமை ஆசிரியரும் ஆவார். இது இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பெண்கள் பத்திரிகையாகும். மேலும் இவர் மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர் கே. எம். மேத்யூவின் மனைவியாவார்.

இவர் மலையாளத்தில் சமையல் இலக்கியம், புதிய சமையல் குறிப்புகளுக்கான ஆசிரியராக இருந்தார்.[1] இவர் மலையாளத்தில் 17 சமையல் புத்தகங்களையும், ஆங்கிலத்தில் 4 புத்தகங்களையும் எழுதியுள்ளார் [2] மேலும் பத்திரிகை, இசை, சமையல் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளிலும் பங்களிப்பு செய்துள்ளார்.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் 1922 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார். அங்கு இவரது தந்தை சென்னை அரசாங்கத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். இவர் தனது 20 வயதில் பின்னர் ஒரு தோட்டக்காரரும், மலையாள மனோரமாவின் எதிர்கால தலைமை ஆசிரியருமான கே.எம். மேத்யூ, என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சமையல் கலையில் தனது திறமைகளை இவர் கூர்மைப்படுத்தினார். இத்திறமைகளை தனது இவர் தந்தையிடமிருந்து பெற்றார்.

மலையாள மனோரமாவில் வெளியிடப்பட வேண்டிய ஒரு செய்முறையைத் தயாரிக்குமாறு இவரது மாமனார் கே.சி.மம்மன் மாப்பிள்ளை கேட்டபோது இவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

பங்களிப்புகள்

[தொகு]

மலையாளத்தில் ஒரு வழக்கமான ஊடக பத்தியான "பாசக விதி" (சமையல் முறை) என்பதன் மூலம் புதிய சமையல் குறிப்புகளுக்கான முக்கிய கட்டுரையாளராகவும் இருந்தார். 1975 ஆம் ஆண்டில் வனிதாவைத் தொடங்குவதன் மூலம் இவர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தார். இவர் அதன் முதல் தலைமை ஆசிரியராக இருந்தார். மேலும் இவரது வாழ்நாள் இறுதி வரை பதவியில் தொடர்ந்தார். பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கோட்டயத்தில் உள்ள கஸ்தூர்பா சமூக நல மையம் மூலம் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.[5]

சமையல், உடல்நலம், அழகு பராமரிப்பு , அழகுக்கலை முதல் பூக்கடை, பயணம் வரையிலான பாடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் ஒரு கட்டுரையாளராகவும் இருந்தார். மேலும் இவரது பெரும்பாலான சமையல் குறிப்புகள் பிரபலமான வெளியீடுகளில் கிடைக்கின்றன.[6]

விருதுகள்

[தொகு]

பத்திரிகைக்கான இவரது பங்களிப்புகள் இவருக்கு பல கௌரவங்களைப் பெற்றன . மேலும் ரேச்சல் தாமஸ் விருது (1992), 'விக்ஞானதீபம் புரஸ்காரம்' (1994), 'நிர்மிதி கேந்திரா' விருது (1996) உள்ளிட்ட பல விருதுகளை வென்றன.[7]

இறப்பு

[தொகு]

நோய்வாய்ப்பட்டிருந்த அன்னம்மா தனது 81 வயதில் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்தவமனையில் 2003 சூலை 10இல் இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Mrs K M Mathew's Recipes". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
  2. "Mrs K M Mathew's Recipes". Onmanorama Food (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
  3. "Mrs. K.M. Mathew passes away". The Hindu Online. Archived from the original on 17 November 2007. பார்க்கப்பட்ட நாள் 26 November 2007. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Mrs K.M Mathew". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
  5. "Mrs. K. M. Mathew, Healthy Recipes Hall of Fame". Holistic Living. Archived from the original on 2002-04-16.
  6. "About Mrs. K.M. Mathew". Puzha.com. Archived from the original on 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
  7. "Recipe for success". The Hindu Online. Archived from the original on 26 August 2010. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னம்மா_மேத்யூ&oldid=3927097" இலிருந்து மீள்விக்கப்பட்டது