8-ஆம் நூற்றாண்டு
Appearance
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 700கள் 710கள் 720கள் 730கள் 740கள் 750கள் 760கள் 770கள் 780கள் 790கள் |
8ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 701 தொடக்கம் கிபி 799 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.
உலகளாவிய நிகழ்வுகள்
[தொகு]எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டைனியர்கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது[1]. நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஸ்கண்டினேவியாவின் வைக்கிங்குகள் ஐரோப்பா, மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.
- போரோபுதூர் கட்டும் பணி துவங்கியது.
- புத்தரின் வாழ்க்கை வரலாறு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
- பல்கேரியர்கள் பலர் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர்.
- மெசோ அமெரிக்க நாகரிகத்தின் உச்சக் கட்டம்.
- 708 - 711, அரபு இராணுவம் சிந்து பகுதியைப் பிடித்தனர்.
- 717-718, கொன்ஸ்டண்டீனபோல் முற்றுகை. 20,000-32,000 அரபுக்கள் பல்கேரியர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
கண்டுபிடிப்புகள்
[தொகு]- காகித உற்பத்தி சீனர்களிடம் இருந்து அரபுகளுக்கு அறிமுகமானது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roberts, J: "History of the World.". Penguin, 1994.