உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெலியாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெலியாயா (Heliaia அல்லது Heliaea, பண்டைக் கிரேக்கம்Ἡλιαία  ; டோரிக் : Ἁλία ஹாலியா ) என்பது பண்டைய ஏதென்சின் உச்ச நீதிமன்றமாகும். அறிஞர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கருத்தானது, இந்த நீதிமன்றத்தின் பெயரானது பண்டைய கிரேக்க வினைச்சொல்லான ἡλιάζεσθαι , அதாவது கூட்டம் என்பதிலிருந்து வந்தது. [α] மற்றொரு விளக்கம் என்னவென்றால், விசாரணைகள் வெளியில், சூரியனுக்குக் கீழே நடைபெற்றதால் நீதிமன்றம் இப் பெயரைப் பெற்றது. [β] துவக்கத்தில், விசாரணைகள் நடத்தப்பட்ட இடத்தின் பெயராக இது இருந்தது, ஆனால் பின்னர் இது நீதிமன்றத்தையும் குறிப்பிடுவதாக ஆனது. [1]

ஹெலியாயா

நீதிபதிகள் ஹீலியாஸ்டுகள் என்று அழைக்கப்பட்டனர் ( ἡλιασταί ) அல்லது dikastes ( δικασταί , ὀμωμοκότες = சத்தியம் செய்தவர்கள், அதாவது ஜூரிகள் ). தீர்ப்பளிக்கும் செயல்பாடு ἡλιάζεσθαι என்று அழைக்கப்பட்டது ( δικάζειν )

ஹெலியாயாவின் அமைப்பு

[தொகு]

ஹெலியாயா அமைப்பானது கிளீசுத்தனீசு அல்லது சோலோனால் நிறுவப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. [2] [γ] இந்த நீதிமன்றத்தில் 6,000 பேர் நீதிபதிகள் குழுவில் இருந்தனர். நகர அரசில் 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் உள்ள ஆண்களில் இருந்து ஆண்டுதோறும் குலுக்கு சீட்டு [3] மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள் தேர்தெடுக்கப்பவில்லை. [4] மேலும் அறிவு அல்லது உடல் ரீதியான குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள், அவர்களின் குறைபாடுகளினால் விசாரணையை முழுமையாக உணருவதில் தடங்கள் இருந்தால், அவர்கள் நீதிபதிகள் குழுவில் தேர்ந்தெடுவதில் விலக்கு அளிக்கப்பட்டனர். தகுதியில்லாத நபர் யாரேனும் நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றால், அவருக்கு எதிராக தகவல் குறிப்பிடப்பட்டு, அவர் ஹெலியாயா முன் நேர் நிறுத்தப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கான தண்டனை அல்லது அபராதத்தை நீதிமன்றம் அவருக்கு விதிக்கும். தண்டனை பண அபராதமாக இருந்தால், தண்டணைக்கு ஆளானவர் பணத்தை செலுத்தும் வரை சிறையில் இருக்க வேண்டியிருக்கும். [4]

நீதிபதிகள் நியமனம்

[தொகு]

ஹீலியஸ்ட்டுக்கான பொது அலுவலகம் என்பது கட்டாயமானதல்ல. நீதிபதிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டது; [5] முதலில் ஒரு நாளுக்கு ஒரு ஓபோல் என்று இருந்தது பின்னர், கிளியோனின் வலியுறுத்தலின் பேரில் கிமு 425 இல் மூன்று ஓபோல்கள், அதாவது அரை டிராக்மா என ஆக்கப்பட்டது.

நீதிபதிகள் குழுவுக்கு குடிமக்களிலில் 6,000 பேர் 10 பழங்குடியின பிரிவிலிருந்தும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (ஒவ்வொரு பழங்குடியின பிரிவிலிருந்தும் 600 பேர் இருப்பர்). பின்னர் அவர்கள் 600 நீதிபதிகள் கொண்ட பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் 500 அல்லது 501 பேர் நீதிபதிகள் குழுவில் இடம்பெறுவர். மீதமுள்ளவர்கள் காலி இடங்களைப் பூர்த்தி செய்யவும், விதிவிலக்கான சந்தர்பங்களிலும் பயன்படுத்தப்படுவர். [6] சில நேரங்களில், குழுக்களில் 201 முதல் 401 உறுப்பினர்கள் அல்லது 1001 முதல் 1501 உறுப்பினர்களும் இருந்தனர். [δ] இவர்களின் பதவிக் காலம் ஓராண்டு ஆகும். இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் ஹீலியாஸ்டிக் உறுதிமொழியை எடுக்க வேண்டும். [1] பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு, நீதிபதிகளுக்கு ஒரு சீட்டு வழங்கப்படும். [7] அந்தச் சீட்டில் பெயர், தந்தை பெயர், ஊர், குழு போன்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கும். [4] இது அவர்களின் நியமனப் பத்திரம் எனலாம். நியமனம் செய்யப்படவர்களுக்கான பதவிக் காலம் ஓராண்டு ஆகும்.

நீதிமன்ற நடைமுறை

[தொகு]

ஹெலியாயா நீதிமன்றம் செயல்படுவதற்கு குறிப்பிட்ட கட்டிடம் எதுவும் இல்லாததால், குறிக்கப்பட்ட ஒரு பகுதியில் திறந்தவெளியில் வழக்குகள் நடந்தன. விசாரணையின் இடம் ஒரு சிறப்பு வேலிக்குள் நடத்தப்பட்டன. அதற்கு வெளியே பார்வையாளர்கள் நிற்கலாம்.[8] ஒவ்வொரு மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர, ஒவ்வொரு நாளிலும் ஹெலியாயா நீதிமன்றம் செயல்படது. எந்த வழக்கை எந்தக் குழு விசாரிக்கவேண்டும் என்று அன்றாடம் காலையில் சீட்டுக் குலுக்கல் மூலம் முடிவு செய்யப்படும். யார் விசாரிப்பார்கள் என முன்கூட்டியே தெரிந்தால் அதனால் ஊழல் போன்றவை ஏற்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு. ஒரு வழக்கை இத்தனைப் பேர்தான் விசாரிக்க வேண்டும் என்ற நிர்ணயம் கிடையாது. வழக்கின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கும். முக்கியமான வழக்குகள் பெரும்பாலும் ஏதென்சிலேயே விசாரிக்கப்பட்டன. இவை தவிர ஆங்காங்கு ஏற்படும் சிறுசிறு வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க முப்பது பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.

நாட்டுக்கு எதிராகவோ, சமயத்துக்கு எதிராகவோ யாராவது நடந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் வழக்கு தொடுக்காது. தனிப்பட்ட நபர்கள் வேண்டுமானால் யார்மீது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என்ற வழக்கம் இருந்தது. நீதி மன்றங்களில் வாதியே தன் தரப்பை எடுத்துச் சொல்லவேண்டும். அப்படி சொல்ல முடியாதவர்கள் சட்ட அறிவு பெற்றவர்களையோ, வாதத்திறமை மிக்கவர்களையோ தன் தரப்பில் வாதிட நியமிக்கலாம். வழக்கின் தீர்ப்பானது நீதிபதிகளின் இரகசிய வாக்கின் மூலம் முடிவு செய்யப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, இறுதி முடிவை ஹெரால்ட் அறிவித்தார். குற்றவாளி, நிரபராதி என்னும் வாக்குகளில் சம அளவில் வாக்குகள் பெற்றால், பிரதிவாதி விடுவிக்கப்பட்டார், ஏனெனில் அவர் "ஏதெனாவின் வாக்கு" பெற்றதாகக் கருதப்பட்டது.

அதிகாராக வரம்பு

[தொகு]

ஹெலியாயா நீதிமன்றங்களில் குடிமையியல், குற்றவியல் என அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டன. ஆனால் கொலை, தீவைப்பு போன்ற வழக்குகள் மட்டும் அரயோப்பாகு அவை முன் விசாரணைக்கு வந்தது.[9]

தண்டனைகள்

[தொகு]

குற்றங்களுக்கு தண்டனை என்பது அபராதம், கசையடி, சூடு போடுதல், வாக்குரிமை இரத்து, சொத்து பறிமுதல், நாடு கடத்தப்படுதல், மரண தண்டனை என குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் விதிக்கப்பட்டன. தண்டனை விதிப்பதற்கு முன்னர் குற்றம் சாட்டியவர், சாட்டப்பட்டவர் என இரு தரப்பினரிடமும் என்ன தண்டனை விதிக்கலாம் என கேட்கப்படும். தண்டனை வழங்கப்படும்போது அது கவனத்தில் கொள்ளப்படும்.

ஹெலியாயாவின் பிரபல வழக்குகள்

[தொகு]

சாக்ரடீசு மீதான வழக்கு

[தொகு]

சாக்கிரட்டீசு மீது மெலட்டஸ், அனிடஸ், லைகான் ஆகியோரால் அசெபியா (சமய சடங்கு எதிர்ப்பு) குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீதான விசாரணை கிமு 399 இல் நடந்தது. நீதிபதிகள் அவரை 220 க்கு 280 வாக்குகளுடன் குற்றவாளி என அறிவித்தனர்.[10] அவருக்கு மரண தண்டனை என்பது இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆயினும்கூட, சாக்ரடீஸ் தனது அமைதியான நடத்தையை இழக்கவில்லை, விசாரணையின் போது அவர் தன்னை நாடுகடத்துமாறு நீதி மன்றத்திற்கு முன்மொழிந்தார். என்றாலும் அவரது நண்பர்கள் அவரைத் தப்பிச் செல்ல பிறகு உதவ முன்வந்தபோது அவர் அதைச் செய்யவில்லை. ஏனெனில் அவர் தன் அன்பான நகரத்தை விட்டு வெளியேறுவது பொருளற்றதாக எண்ணினார்.

பெரிக்கிள்ஸ் மீதான வழக்கு

[தொகு]

புளூட்டாக்கின் கூற்றுப்படி,[11] பெரிக்கிள்ஸ் இரண்டு முறை கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்குகளை எதிர்கொண்டார். முதலாவது பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு சற்று முன்பும், இரண்டாவது போரின் முதல் வருடத்தின் போது, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அதன் தொகை பதினைந்து அல்லது ஐம்பது தாலந்துகள் ஆகும்.

மேலும் காண்க

[தொகு]


குறிப்புகள்

[தொகு]

     α.   ^ In Argos the place where its court was seated was also called ἁλιαία.

     β.   ^ Sun = ἥλιος and the verb ἡλιοῦσθαι (passive voice) = enjoy the sun.

     γ.   ^ According to Mogens Herman Hansen, The Athenian Ecclesia: A Collection of Articles 1983-1989, page 260, "apart from Plutarch, who quotes the Ath. Pol., there is no other evidence that the heliaia was a court of appeal, and the scanty contemporary sources indicate that it was a court of first instance."

     δ.   ^ When certain chambers were merged. This was the case of Pericles' trial.[12]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலியாயா&oldid=3419454" இலிருந்து மீள்விக்கப்பட்டது