உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளெலி
புதைப்படிவ காலம்:Middle Miocene–Recent
சிறிய வெள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
முதுகெலும்பி
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Myomorpha
பெருங்குடும்பம்:
Muroidea
குடும்பம்:
Cricetidae
துணைக்குடும்பம்:
Cricetinae

Genera

Mesocricetus
Phodopus
Cricetus
Cricetulus
Allocricetulus
Cansumys
Tscherskia

வெள்ளெலிகள் கொறித்துன்னும் இனத்தை சேர்ந்தவையாகும். இது கிரிகெடின் என்ற துணைக்குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இந்த துணைக்குடும்பத்தில் 25 சிறப்பினங்கள் உள்ளன. அவை ஆறு அல்லது ஏழு இனங்களாக பிரிக்கப்படுகின்றன.[1]

வெள்ளெலிகள் சந்தி வேளையின் போது செயல்படும் பிராணியாகும் (கிரிப்பஸ்க்யுலர்). காடுகளில், கொன்றுண்ணிகளிடமிருந்து அதனை பாதுகாத்துக்கொள்ள பகல் வேளைகளில் அவை மண்ணுக்கு அடியில் வாழும். இவற்றின் உணவு முறையில் பல வகையான உணவு வகைகள் உள்ளன. இவற்றில் உலர வைத்த உணவுகள், பெர்ரி பழ வகைகள், கடலைகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும். காடுகளில் அவை கீழே கிடக்கக்கூடிய கோதுமை, கடலை மற்றும் பழங்கள் காய்கறிகளின் துண்டுகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றன. எப்போதாவது சிறிய பழப்பூச்சி, கிரிக்கெட் மற்றும் உணவு புழுக்கள் போன்ற சிறிய பூச்சிகளையும் இவை உண்ணும். தலையிலிருந்து தோள்பட்டை வரை காணக்கூடிய வகையில் தலையின் இரு புறமும் மென்மையான மயிர் போன்ற பெரிதான பைகள் காணப்படும். இவற்றில் சேமிக்கப்பட வேண்டிய அனைத்து உணவு வகைகளையும் வைத்துக்கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குக் கொண்டு வரும் அல்லது பின்னர் உண்ணும்.

1839 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பூர்வமாக தங்க வெள்ளெலிகளைக் (மிசோக்ரைசிடஸ் ஆரடஸ் ) குறித்து விவரித்து இருந்தாலும் கூட, 1930 ஆம் ஆண்டு தான் ஆராய்ச்சியாளர்களால் வெள்ளெலிகளை கருவுற செய்து வீட்டிலேயே வளர்க்கும் முறையை வெற்றிகரமாக அறிவிக்க முடிந்தது.[2] வீட்டில் வளர்க்கக்கூடிய வகையில் இருக்கும் சிரியன் வெள்ளெலிகள், சிரியாவில் உள்ள இஸ்ரேல் அஹரோனி என்ற விலங்கியல் நிபுணரால் முதல் முதலில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளெலிகளில் இருந்து வந்தவையாகும்.[3]

சுற்றுச்சூழல், மரபணுக்கள் மற்றும் மக்களுடன் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பொருத்து வெள்ளெலிகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். அவற்றை பிடித்து வளர்ப்பது சுலபமாக இருப்பதனால் பல பொருளாதார வகையில் வளர்ந்த நாடுகளில் இவற்றை ஆய்வுக்கூட விலங்குகளாக பொதுவாக உபயோகிக்கின்றனர். வெள்ளெலிகள் புகழ் பெற்ற சிறிய வீட்டு செல்ல பிராணிகளாகவும் அறியப்படுகிறது.[2]

பெயரியல்

[தொகு]

ஹாம்ஸ்டர் என்ற பெயர் ஜெர்மன் மொழியில் உள்ள Hamster என்ற சொல்லில் இருந்து வந்தவையாகும். இந்த சொல் கூட பழங்கால ஜெர்மன் மொழியில் உள்ள hamustro என்பதில் இருந்து வந்ததாகும். இது ஒருவேளை பழைய ரஷிய வார்த்தையான choměstrǔ வுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ரஷிய வார்த்தையான khomiak வெள்ளெலி மற்றும் பால்டிக் வார்த்தையுடனும் கலந்து இது உருவாகி இருக்கலாம். பாலிடிக் வார்த்தை (லிதுவானியன் staras "வெள்ளெலி")[4] அல்லது பெர்சியன் (ஏ.வி hamaēstar "அடக்குதல்")[5] மொழியிலிருந்தும் இந்த வார்த்தை வந்திருக்கலாம்.

குணாதிசயங்கள்

[தொகு]

வெள்ளெலிகள் தடிமனான உடல் வாகு கொண்டவை. உடலின் நீளத்தை விட அதனுடைய வாலின் நீளம் குறைவாக இருக்கும். இதற்கு மயிர்கள் கொண்ட சிறிய காதுகள், சிறிய ஒட்டக்கூடிய தன்மையுடைய கால்கள் மற்றும் அகலமான பாதம் ஆகியவை இருக்கும். அவற்றின் அடர்த்தியான, பட்டுப்போன்ற மயிர்கள் நீளமாகவோ அல்லது சிறியதாகவோ, இனத்திற்கு ஏற்ப கறுப்பு, சாம்பல், தேன், வெள்ளை, பழுப்பு, மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் அல்லது இந்த வண்ணங்களின் கலவையாகவும் காணப்படலாம்.

ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலி

ஜீனஸ் ஃபோடொபஸ் வகையைச் சேர்ந்த இரண்டு இனத்தைச் சார்ந்த வெள்ளெலிகள் (ஃபோடோபஸ் கேம்ப்பெல்லி, கேம்ப்பெல்லின் குள்ள வெள்ளெலி மற்றும் குளிர்கால வெள்ளை ரஷிய குள்ள வெள்ளெலியான ஃபோடோபஸ் சங்கோரஸ்) மற்றும் ஜீனஸ் கிரிகெடுலஸ் வகையைச் சார்ந்த இரண்டு இனங்கள்(சீன கோடுகளுடைய வெள்ளெலியான கிரிக்கெடுலஸ் பாராபென்சிஸ் மற்றும் சீன குள்ள வெள்ளெலியான கிரிக்கெடுலஸ் கிரிசியஸ்) ஆகியவற்றிற்கு தலையில் இருந்து வால் வரை ஒரு அடர்த்தியான கோடு காணப்படும். ஜீனஸ் ஃபோடோபஸ் என்ற இனம் மிகவும் சிறியதாக இருக்கும். இவற்றின் உடல் அளவு 5.5 முதல் 10.5 செ.மீ வரை (2 முதல் 4 இஞ்ச் வரை) இருக்கும். அதிகமாகக் காணப்படும் வெள்ளெலி (கிரிக்கெடஸ் கிரிக்கெடஸ் ) தான் மிகவும் நீளமானது. இது 6 செ.மீ வரை (2-1/4 இஞ்ச்) உள்ள வால் பகுதியை சேர்க்காமல் 34 செ.மீ (சுமார் 13.5 இஞ்ச்) அளவுடையது. பெரிய முடியுடைய அல்லது டெட்டி கரடி வெள்ளெலி என்றும் அழைக்கப்படும் ஒரு வகை சிரியன் வெள்ளெலியான த அங்கோரா வெள்ளெலி தான் இரண்டாவது நீளமான வெள்ளெலி வகையாகும். இது சுமார் 18செ.மீ வரை காணப்படும் (சுமார் 7 இஞ்ச்).[2]

வெள்ளெலிகளுக்கு சுமாரான கண் பார்வை தான் இருக்கும். அவற்றிற்கு கிட்டப்பார்வை உண்டு மற்றும் வண்ணங்களை அறியும் தன்மை குறைவாக இருக்கும். ஆனால், அவற்றிற்கு மிக அதிகமான வாசனை உணரும் சக்தியும், தீவிர கேட்கும் திறனும் உண்டு. வெள்ளெலிகள் தங்களது நுகரும் தன்மையை வைத்து பாலினம், உணவு மற்றும் இன ஈர்ப்பு சுரப்பி ஆகியவற்றை கண்டுகொள்கின்றன. இவை இந்த வகை உயிரினம் அதிக சத்தத்தை கூட உணரக்கூடியதாக இருக்கிறது. செவியுணரா ஒலியின் வரம்பில் கூட அவற்றால் கேட்க மற்றும் தகவல் பரிமாற முடியும்.[3]

சில சமயத்தில் வால் பகுதியை பார்ப்பது கடினமாக இருக்கும். பொதுவாக வால் பெரியதாக இருக்காது (உடல் நீளத்தில் 1/6 அளவு). சீன குள்ள வெள்ளெலிக்கு மட்டும் உடல் நீளம் போலவே வால் நீளமும் இருக்கும். முடியின் நீளம் அதிகமுள்ள வெள்ளெலிகளில் இது தெரியாமலே இருக்கும். வெள்ளெலிகள் வளையும் தன்மையுடையவை மற்றும் அவற்றின் எலும்புகள் எளிதில் நொறுங்கும் தன்மையுடையவை. அதிகப்படியான வெப்ப நிலை மாற்றங்கள், அதிகப்படியான சூடு மற்றும் குளிர் ஆகியவற்றால் இவை எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாகும். வெள்ளெலிகள் பெருங்குடல் நொதிப்பிகள். இரண்டாவது முறை உணவை ஜீரணிக்க தனது கழிவையே உண்ண வேண்டியிருக்கும். இந்த முறைக்கு பெயர் கோப்ரோஃபேகி (தன் கழிவு உண்ணுதல்). வெள்ளெலிகள் உணவில் இருந்து சரியான ஊட்டச்சத்துகளை பெற இது மிகவும் அவசியமாக உள்ளது.[1]

வெள்ளெலிகள் அனைத்துண்ணிகளாகும். அவை பல தரப்பட்ட உணவுகளை உண்ணக்கூடியவை. அவற்றிற்கு வழக்கமான வெள்ளெலி உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் புதிய பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்கள், (இவை அழுகியோ அல்லது கெட்டுப் போனால் அவற்றை அகற்ற வேண்டும்) விதை மற்றும் பழங்கள் உணவுகளை முயற்சிப்பது வெள்ளெலிகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும். பெரும்பாலான வீட்டு விலங்கு உணவுகள் வெள்ளெலிகளுக்கு உகந்ததாக இருப்பதில்லை.

கொறித்துண்ணும் இனத்தைச் சேர்ந்தவை போலவே வெள்ளெலிகளிலும் காணப்படும் ஒரு குணாதிசயம் அதன் வெட்டுபற்களாகும். வாயின் முற்பகுதியில் இரண்டு ஜோடிகள் காணப்படும். இவை எப்போதும் வளர்ந்து கொண்டே இருப்பதால் அடிக்கடி அவை தேய்க்கப்படவேண்டும். வெள்ளெலிகள் கன்னங்களில் உள்ள பெரிய பை போன்ற அமைப்பில் உணவை சுமந்துக்கொண்டு அடியில் உள்ள சேமிப்பு பகுதிக்கு எடுத்துச்செல்கின்றது. கன்னங்கள் முழுமையாக இருக்கும் போது அதன் தலையின் அளவு இரட்டிப்பாக (அல்லது மூன்று மடங்காகவும்) காட்சி அளிக்கலாம்.[1] மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வெள்ளெலிகள் கூட்டம் கூட்டமாக உணவுக்காக பூச்சிகளை வேட்டையாடுவது உண்டு.[6]

நடத்தை

[தொகு]
தங்க வெள்ளெலி வளர்த்தல்

சிரியன் வெள்ளெலிகள் (மீசோக்கிரிக்கெட்டஸ் ஆரட்டஸ் ) பொதுவாக தனிமையில் இருப்பவை. கூட்டமாக வைக்கப்பட்டால் ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து கூட போகும். ஆனால், சில குள்ள வெள்ளெலிகள் அதே இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரினத்துடன் சேர்ந்து வாழும். வெள்ளெலிகள் ஒரு நாளின் பல மணி நேரங்கள் மண்ணுக்கடியிலேயே வாழ்ந்திருப்பதால் இவை கிரிப்பஸ்க்யுலர் எனக் கருதப்படுகிறது. அவை சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்து இருட்டுவதற்கு முன் திரும்பிவிடும். ஒரு கட்டத்தில் அவை இரவு முழுதும் அதிக செயல்பாடுடன் இருப்பதால் அவற்றை இரவு விலங்கு என்றும் கருதப்பட்டன. சில இனங்களை விட மற்றவை இரவு விலங்குகள் என கருதப்படுகின்றன.[3] அனைத்து வெள்ளெலிகளும் சிறந்த முறையில் மணலில் பொந்து ஏற்படுத்தக்கூடியவை. தங்களது பொந்துகளை இரண்டு வழிகளுடனும் கூடு கட்ட, உணவு சேகரிக்க மற்றும் மற்ற செயல்பாடுகளுக்காக தனி அறைகளுடனும் அமைத்துக்கொள்கின்றன.[1] மற்ற பாலூடிகளின் சுரங்கங்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, குளிர்கால வெள்ளை ரஷிய குள்ள வெள்ளெலிகள் (ஃபாஸ்டோஃபஸ் சுங்கோரஸ் )பிகாவின் பொந்து மற்றும் பாதைகளை பயன்படுத்துகின்றன. வெள்ளெலிகள் அசைவற்ற நிலையில் இருக்காத போதிலும், அவை தங்களது உடல் மண்டலங்கள் பலவற்றை “நிறுத்துகின்றன”. உதாரணமாக சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை சிறிது நேரத்திற்கு நிறுத்துகின்றன. இந்த அசைவற்ற நிலை ஏழு முதல் பத்து நாள் வரை நீடிக்கும். வெள்ளெலிகள் தூங்கும் போது அதிக அளவு உணவை சேமித்து வைக்கும் என்பது தெரிந்த ஒன்றாகும். இதனால் வீட்டு வெள்ளெலிகள் சில நாட்களுக்கு உணவு இல்லாமலும் வாழும் தன்மையுடையது.[2]

இனப்பெருக்கம்

[தொகு]
ஒரு வாரத்துக்கு குறைவான வயதை உடைய குட்டிகளுடன் இருக்கும் தாய் சிரியன் வெள்ளெலி.

இனத்திற்கேற்ப வெள்ளெலிகள் பல்வேறு வயதுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. இது ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் வரை இருக்கலாம். ஒரு பெண் வெள்ளெலியின் இனப்பெருக்க வாழ்க்கை 18 மாதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் ஆண் வெள்ளெலியின் இனப்பெருக்க வாழ்வு அதை விட கூடுதலாக இருக்கும். பெண் வெள்ளெலிகள் ஒவ்வொரு நான்கு நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கும். அதன் பிறப்புறுப்புகள் சிவந்து போவதை வைத்து இதனை அறியலாம்.[2]

வெள்ளெலிகள் சில பருவங்களில் மட்டும் தான் இனப்பெருக்கம் செய்யும். வட துருவத்தில் இவற்றின் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையாகும். இந்த நேரத்தில் 16 முதல் 23 நாட்கள் கர்ப்ப காலத்திற்குப் பின் இரண்டு முதல் ஐந்து முறை குட்டிகளை ஈனும். ஒன்று முதல் 13 குட்டிகள் வரை பிறக்கும்.[6] சிரியன் வெள்ளெலிகளின் கர்ப்ப காலம் 16 முதல் 18 நாட்கள், ரஷிய வெள்ளெலிகளின் கர்ப்ப காலம் 18 முதல் 21 நாட்கள், சீன வெள்ளெலிகளின் கர்ப்ப காலம் 21 முதல் 23 நாட்கள் மற்றும் ரோபோரொவ்ஸ்கி வெள்ளெலிகளின் கர்ப்ப காலம் 23 முதல் 30 நாட்கள் வரை இருக்கும். சிரியன் வகையை சேர்ந்தவைகள் ஒரு ஈற்றில் பெறக் கூடிய குட்டிகளின் எண்ணிக்கை ஏழாகும். ஆனால் சில சமயங்களில் 24 வரை கூட இருக்கலாம். 24 என்பது அதிக பட்சமாக கருப்பையில் இருக்கக்கூடிய குட்டிகளின் எண்ணிக்கையாகும். கேம்பெல்லின் குள்ள வெள்ளெலிகள் ஒரு ஈற்றில் 4 முதல் 8 குட்டி வரை இருக்கும். இது 14 வரை கூட செல்லும். குளிர்கால வெள்ளை ரஷிய குள்ள வெள்ளெலிகள் இவற்றை விட சிறிது குறைந்த எண்ணிக்கை குட்டிகளையே ஈனும். இது சீன மற்றும் ரோபோரோவ்ஸ்கி வெல்ளெலிகளுக்கும் பொருந்தும்.

சைபீரிய வெள்ளெலிகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நெருக்கமாக வாழும் தன்மையுடையவை. அவற்றை பிரித்தால் அவை மிகவும் சோகமடைந்து விடும். இது குறிப்பாக ஆண் வெள்ளெலிகளில் காணப்படும். ஆண் வெள்ளெலிகள் செயலற்று போகும். அதிகமாக உண்ணும் மற்றும் மனிதர்களில் காணப்படும் மன உளைச்சலைப் போலவே இவைகளும் தங்கள் நடத்தையில் சில மாற்றங்களைக் காட்டும். இதனால் வெள்ளெலிகளுக்கு உடல் எடை அதிகரிக்கவும் கூடும்.

வெள்ளெலிகள் அதிக காலம் சேர்ந்தே வைக்கப்பட்டிருந்தால், ஆண் வெள்ளெலிகள் மீது சீன பெண் வெள்ளெலிகள் மிக ஆதிக்கத்தோடு நடந்துக்கொள்ளும் என அறியப்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண் தாக்கிய பிறகு ஆண் இறந்து கூட போகக்கூடும். சீன வெள்ளெலிகள் வளர்க்கப்படும் போது, அவை இனப்பெருக்கம் செய்து முடித்தவுடன் அவற்றை தனியாக வைத்துவிட வேண்டும். இல்லையெனில் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும்.

தங்க பெண் வெள்ளெலிகளும் ஆண் வெள்ளெலிகள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் அவற்றையும் இனப்பெருக்கத்துக்குப் பின் தாக்கிக்கொள்ளாமல் இருக்க அவற்றை பிரித்து விட வேண்டும். குட்டிகள் பிறக்கும் போது பெண் வெள்ளெலிகள் குறிப்பாக சத்தத்திற்கு மிகுந்த உணர்வுடன் காணப்படும். தனது குட்டிக்கு அபாயம் என்று தோன்றினால் அதனை தானே சாப்பிட்டு விடுவதும் உண்டு. ஆனால், சில சமயங்களில் அவை கன்னத்தில் உள்ள பைகளிலேயே இருக்கும்.[3]

குட்டியை ஈனுவதற்கு முன்னதாகவே தாயால் தயார் செய்யப்பட்ட ஒரு கூட்டில் வெள்ளெலிகள் முடிகள் ஏதுமின்றி குருடாகவே பிறக்கும்.[2] தாய் காட்டில் உதிர்ந்து காணப்படும் பொருட்களான இலைகளை உபயோகிக்கும். பஞ்சு அல்லது செய்தித்தாளை அவை அதிகமாக விரும்புகின்றன. ஒரு வாரத்திற்குப் பின் கூட்டிற்கு வெளியே உள்ளவற்றை அவை பார்வையிடத் தொடங்கும். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவை முழுமையாகவே சுதந்திரமாக விடப்படுகின்றன. ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலிகள் 4 வாரத்துக்குப் பின் சுதந்திரம் அடைகின்றன. வெள்ளெலி வளர்ப்பவர்கள் பலர், அவை மூன்று முதல் ஒன்பது வாரங்கள் வரை இருக்கும் போது கடைகளில் விற்று விடுவார்கள்.

புணர்தல் மற்றும் வாழ்நாள்

[தொகு]

சிரியன் வெள்ளெலிகள் பிடித்து வைத்திருக்கும் போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை பொதுவாக வாழும். காடுகளில் அவை இதை விட குறைவாகவே வாழும். பிடித்து வைத்திருக்கும் போது ரஷிய வெள்ளெலிகள் (கேம்ப்பெல் மற்றும் குளிர்கால வெள்ளை) தோராயமாக 1.5லிருந்து 2 ஆண்டுகள் வரை வாழும். சீன வெள்ளெலிகள் 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை வாழும். சிறிய அளவில் இருக்கும் ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலி 2 முதல் 3 வருடங்கள் வரை பிடித்து வைத்திருக்கும் போது வாழும்.[1] சிரியன் மற்றும் ரஷியன் வெள்ளெலிகள் விரைவாகவே பருவமடையும். அவை இளம் வயதிலேயே இனப்பெருக்கத்தை தொடங்கி விடும் (4-5 வாரம்). சீன வெள்ளெலிகள் 2-3 மாதங்களில் இனப்பெருக்கத்தைத் தொடங்கும் மற்றும் ரோபோரோவ்ஸ்கிகள் 3-4 மாதங்களில் தொடங்கும்.

இவற்றை அதன் போக்கில் விட்டுவிட்டால், வெள்ளெலிகள் ஒரு வருடத்தில் பல முறை குட்டிகள் போடும். ஒவ்வொரு ஈற்றின் போதும் பல குட்டிகள் இருக்கும். மேலே இருந்து பார்க்கும் போது உடலுறவுக்கு தயாராக பருவமடைந்திருக்கும் ஒரு பெண் வெள்ளெலிக்கு மெல்லிய வால் பகுதி காணப்படும். ஆணின் வால் பகுதி இரண்டு பக்கமும் வீக்கத்துடன் காணப்படும். இது அனைத்து இனங்களிலும் தெரியாது. ஆண் வெள்ளெலிகளுக்கு அவற்றின் உடலை விட பெரிதான விரைகள் காணப்படும். உடலுறவுக்கான பருவம் அடையும் 4-6 வாரங்களுக்கு முன் ஒரு இளம் வெள்ளெலியின் பாலை கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். சோதித்து பார்க்கும் போது, பெண் வெள்ளெலிகளின் மலவாய் சார்ந்த மற்றும் இனப்பெருக்க உறுப்பு துவாரங்கள் அருகருகே காணப்படுகின்றன. ஆனால் ஆண்களில் இவை தூரமாகக் காணப்படுகின்றன. (ஆண்குறி ஒரு துவாரத்திற்குள் இருக்குமாதலால் அது ஒரு துவாரம் போல அல்லது இளஞ்சிவப்பு நிற பரு போல காணப்படும்).[2]

பிடித்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளெலியை அதிக நாட்களுக்கு தனது குட்டிகளோடு வைத்திருந்தால் (3-4 வாரங்கள் அல்லது அதற்கு மேலாக), அது தனது குட்டிகளையே தின்றுவிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. குட்டிகள் தங்களுக்கான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கிய உடனேயே அவற்றை பிரித்து விடுவது மிகவும் அவசியமாகும்.

வெள்ளெலிகளை வீட்டு விலங்காக பார்த்தல்

[தொகு]
குட்டை-முடியுடைய சேபிள் சிரியன் வெள்ளெலி

அதிகமாக அறியப்படும் வெள்ளெலி இனம் சிரியன் அல்லது தங்க வெள்ளெலியாகும் (மீசோகிரிக்கிட்டஸ் ஆரட்டஸ் ). இந்த வகை வெள்ளெலியையே பொதுவாக வீட்டு விலங்குகளாக வளர்ப்பர். இது சில சமயங்களில் “அலங்கார” வெள்ளெலி எனவும் அழைக்கப்படும். வீட்டு விலங்கு கடைகளில் இவற்றை “ தேன் கரடிகள்” , “பாண்டா கரடிகள்”, “கருப்பு கரடிகள்”, ஐரோப்பிய கருப்பு கரடிகள்”, “போலார் கரடிகள்”, “டெட்டி கரடிகள்” மற்றும் டால்மேஷியன் என்று அவற்றின் வாண்ணங்களுக்கு ஏற்ப அழைப்பர். இதைத் தவிர வேறு பல வகைகளும் உண்டு. பல செண்டி மீட்டர்கள் வரை வளரக் கூடிய, சிறப்பு பராமரிப்பு தேவைப்படக்கூடிய முடி உடையவையும் இதில் அடங்கும். பிரித்தானிய விலங்கியல் நிபுணர் லியோனார்டு குட்வின், யுனைடட் கிங்டமில் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளெலிகள் பல இரண்டாம் உலகப் போரின் போது மருத்துவ ஆராய்ச்சி வேலைகளுக்காக அவர் அறிமுகப்படுத்திய காலனிகளில் இருந்து வந்தவை என்று கூறுகிறார்.[7]

ஒரு ரஷிய குள்ள வெள்ளெலி

“குள்ள வெள்ளெலி”களின் நான்கு வகைகளும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்படுகின்றன. இந்த நான்கில் மிக பொதுவானவை கேம்பெல்லின் குள்ள வெள்ளெலி (ஃபோடோபஸ் கேம்ப்பெலி )- இவை “ரஷிய குள்ளர்கள்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், பல வெள்ளெலிகள் ரஷியாவில் இருந்து வந்தவை. ஆகையால் இந்த பெயர் அவற்றை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டாது. குளிர்கால வெள்ளை ரஷிய குள்ள வெள்ளெலிகளின் (ஃபோடோபஸ் சங்கோரஸ்) மேற்பரப்பு குளிர்காலத்தில் வெள்ளையாக மாறும் (பகல்வெளிச்சம் குறையும் போது).[2] ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலிகள் (ஃபோடோபஸ் ரோபோரோவ்ஸ்கி ) மிக சிறியதாக மற்றும் வேகமாக இருப்பதனால் அவற்றை வீட்டில் வளர்ப்பது கடினமாகும்.[1] சீன வெள்ளெலி (கிரிக்கெடுலஸ் கிரிசீயஸ் ), உண்மையான “குள்ள வெள்ளெலியாக" இல்லையென்றாலும் பற்றும் தன்மையுடைய வால் இவற்றிற்கு மட்டும் தான் உண்டு (சுமார் 4 செமீ)- வெள்ளெலிகள் பலவற்றிற்கு சிறிய பற்றும் தன்மையற்ற வால்களே காணப்படுகிறது.

பல வளர்ப்பாளர்கள் தங்கள் வெள்ளெலிகள் மற்றவர்களுக்கும் காட்டுவர். ஆகையால், ஒன்றிரண்டை தங்களுக்கென்றே வைத்துக் கொள்ளவும், நல்ல ஆரோக்கியமான வெளியே காட்டக் கூடியவகையில் உள்ள வெள்ளெலிகளை வளர்க்கவும் அவர்கள் முயல்வர். ஆகையால் வளர்க்கத் தொடங்கும் போது தரம் மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் அவசியமாகிறது. வெள்ளெலி வளர்ப்பதில் நிபுணர்கள் வெளியே காட்டப்படும் வெள்ளெலிகளை மட்டும் வளர்பப்தில் நிபுணத்துவம் உடையவர்கள் அல்ல. அவர்கள் வீட்டு வெள்ளெலிகளையும் வளர்க்க வேண்டியிருக்கும். இவை திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தின் காரணமாக இருக்கலாம். வெள்ளெலிகள் பொதுவாக நல்ல முறையில் பராமரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நல்ல முறையில் கையாளப்படுவதால் அவை சிறந்த வீட்டு விலங்குகளாக விளங்குகின்றன. வளர்ப்பவரிடம் இருந்து நேரடியாக ஒரு வெள்ளெலியை வாங்கினால் அதன் பெற்றோர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு இருக்கும்.

வகைகள்

[தொகு]

விலங்கியல் நிபுணர்கள் பிரதான குடும்பமான முராய்டியாவில் உட்குடும்பமான கிரிகெடினை சரியாக பொருத்துவது குறித்து மாற்றுக் கருத்தை வலியுறுத்துகின்றனர். வோல்கள், லெமிங்கள் மற்றும் புது உலக எலிகள் மற்றும் சுண்டெலிகள் ஆகியவை அடங்கிய கிரிகேடிடே குடும்பத்தில் அதனை பொருத்துகின்றனர். மற்றவர்கள், இவை அனைத்தையும் முரிடே என்ற ஒரு பெரிய குடும்பத்தில் சேர்க்கின்றனர். இதன் பரிணாம வரலாறு அழிந்து போன 15 பொதுவான புதைப்படிமங்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது. இது 11.2 மில்லியன் முதல் 16.4 மில்லியன் வருடங்களுக்கு முன் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள மத்திய மயொசீன் எபோக் இடங்களிலிருந்து வந்ததாகவும் கருதப்படுகிறது. ஆசியாவில் 6 மில்லியன் முதல் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம். வாழக்கூடிய ஏழு வகைகளில் 4 இனங்கள் அழிந்துவிட்டன. கிரிக்கெடஸீன் அழிந்து போன வெள்ளெலியில் ஒன்று, உதாரணமாக மத்திய மயோசின் காலத்தில் வட ஆப்பிரிகாவில் வாழ்ந்தது. அவற்றுள் அழியாமல் இருந்த ஒரே வெள்ளெலி யுரேசியாவில் காணப்படும் பொதுவான வெள்ளெலியாகும்.

  • துணைக்குடும்ப கிரிகேடினே
    • அலோக்ரிகெடூலஸ் பேரினம்
    • கேன்சுமிஸ் பேரினம்
    • கிரிக்கெடுலஸ் பேரினம்
      • சி.ஆல்டிகோலா இனம் – லடாக் வெள்ளெலி
      • சி ச்யூடோக்ரிசியஸ் மற்றும் சி.அப்ஸ்குயூரஸ் உட்பட சி பாராபென்சிஸ் இனம் ஆகியவை சீன கோடுடைய வெள்ளெலி என்றும் சீன வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது; இவை கோடுடைய குள்ள வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.
      • சி. கிரீசியஸ் இனம் - சீன (குள்ள) வெள்ளெலி. இது எலி வெள்ளெலி என்று அழைக்கப்படுகிறது.
      • சி. காமென்சிஸ் இனம் – திபத்திய வெள்ளெலி
      • சி. லாங்கிகௌடாடஸ் இனம் – பெரிய வாலுடைய வெள்ளெலி
      • சி.மைக்ரடோரியஸ் இனம் – அமெரிக்க வெள்ளெலி, இடம்பெயறக்கூடிய சாம்பல் வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது. சாம்பல் வெள்ளெலி; சாம்பல் குள்ள வெள்ளெலி; இடம்பெயரக்கூடிய வெள்ளெலி
      • சி. சோகோல்வி இனம் - சோகோலோவின் வெள்ளெலி
    • கிரிக்கெடஸ் பேரினம்
      • சி.கிரிக்கெடஸ் இனம்- ஐரோப்பிய வெள்ளெலி, பொதுவான வெள்ளெலி அல்லது கருப்பு வயிறுடைய வயல் வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.
      • சி. நெஹ்ரிங்கி இனம்- ருமானிய வெள்ளெலி
    • மீசோகிரிக்கெடஸ் பேரினம் – தங்க வெள்ளெலி
      • எம். ஆரட்டஸ் இனம் – சிரிய வெள்ளெலி, தங்க வெள்ளெலி அல்லது “டெட்டி கரடி வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.
      • எம். பிராண்டி இனம் – துருக்கி வெள்ளெலி, பிராண்ட் வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது; அசர்பைஜானி வெள்ளெலி
      • எம். நியூடோனி இனம் – ரோமானிய வெள்ளெலி
      • எம். ராடை இனம் – சிஸ்காகேசியன் வெள்ளெலி
    • ஃபோடோபஸ் பேரினம்– குள்ள வெள்ளெலிகள்
    • கெர்ச்கியா பேரினம்
      • டி. ட்ரைடான் இனம் –பெரிய வாலுடைய வெள்ளெலி, கொரிய வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளெலி இனங்களுக்கு இடையேயான உறவுமுறை

[தொகு]

நியூமேன் மற்றும் பலர் (2006) சேர்ந்து மூன்று மரபணுக்களைக் கொண்டு டி.என்.ஏ தொடர் மூலம் மேற்கூறிய 17 இனங்களில் 12 இனங்களின் மீது அணுக்கூறு மரபணு சோதனை நடத்தினர்: 12எஸ் ஆர்.ஆர்.என்.ஏ (12S rRNA), சைட்டோக்ரோம் பி மற்றும் வோன் வில்லெப்ராண்ட் காரணி. கீழ்க்கண்ட உறவுமுறைகளை அவர்கள் கண்டறிந்தனர்:

“ஃபோடோபஸ்” குழு

வெள்ளெலிகளின் முதல் வகைகளை ஃபோடோபஸ் பேரினம் பிரதிநிதித்துவம் செய்ததாக கண்டறியப்பட்டது. இவர்களின் பகுப்பாய்வில் இரண்டு இனங்களும் இணைக்கப்பட்டன. கிரிக்கெடுலஸ் காமென்சிஸ் (அது தொடர்பான சி.ஆல்டிகோலா ) இந்த ஃபோடோபஸ் குழுவின் அங்கமாக இருக்கலாம் அல்லது அது போன்ற ஒரு அமைப்பை பெற்றிருக்கலாம் என மற்றொரு ஆய்வின் முடிவு (லெபெடேவ் முதலியோர் 2003) பரிந்துரைக்கிறது.

"மீசோகிரிக்கெடஸ் குழு"

ஜீனஸ் மீசோகிரிக்கெடஸ் பேரினம் ஒரு குழுவை (உயிரின கிளை) அமைக்கிறது. இவற்றின் ஆய்வில் நான்கு இனங்களும் இடம்பெற்றன. எம். ஆரட்டஸ் மற்றும் எம்.ராடீ ஒரு உட்குழுவாகவும், எம். பிராண்டி மற்றும் எம். நியூடோனி ஒரு உட்குழுவாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மற்ற குழுக்கள்

மற்ற வெள்ளெலி இனக் குழுக்கள் மூன்றாவது பிரதான குழுவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கிரிக்கெடுலஸில் உள்ள மூன்று இனங்களில் இரண்டு முதல் குழுக்களாகக் பிரதிநிதிப்படுத்தப்பட்டது. இந்த குழுவில் கிரிக்கெடுலஸ் பாராபென்சிஸ் (அதற்குத் தொடர்பான சி சோகோலோவி ) மற்றும் கிரிக்கெடுலஸ் லாங்கிகௌடாடஸ் ஆகியவை இருந்தன.

மற்றவை

மற்ற குழுக்களில் அலோகிரிக்கெடுலஸ் , செர்ஸ்கியா , கிரிக்கெடஸ் மற்றும் கிரிக்கெடுலஸ் மைக்ராடோரியஸ் ஆகியவை இருந்தன. அலோகிரிக்கெடுலஸ் மற்றும் சி ஆகியவை தொடர்புடைய சகோதரக் குழுக்கள் ஆகும். கிரிக்கெடுலஸ் மைக்ரடோரியஸ் அவற்றின் அடுத்த நெருங்கிய உறவாகும். செர்ஸ்கியா அடிதளமாக அமைந்தது.

இதற்கு ஒத்த விலங்குகள்

[தொகு]

சில கொறித்துண்ணிகள் சிலநேரங்களில் “வெள்ளெலிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. தற்போது இவற்றை கிரிகேடினே துணைக்குடும்பத்திலிருந்து பிரிப்பதில்லை. இவற்றில் மேண்ட் வெள்ளெலி அல்லது கிரெஸ்டட் வெள்ளெலியும் அடங்கும். இது மேண்ட் எலி (லோஃபியோமிஸ் இம்ஹாசி ) என்று அழைக்கப்படுகிறது. எனினும், இவை இந்த பெயரில் விற்கப்படுவதில்லை. மற்றவை, சுண்டெலி போன்ற வெள்ளெலிகள் (கேலோமிஸ்கஸ் எஸ்.பி.பி) மற்றும் வெள்ளை வால் எலி (மிஸ்ட்ரோமிஸ் ஆல்பிகௌடாடஸ் ).

மேலும் பார்க்க

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  • சின்சில்லா
  • கெர்பில்
  • கினி பன்றி
  • வெள்ளெலி பந்தயம்
  • ஹம்டாரோ
  • எலி
  • ஆற்றங்கரை கதைகள்
  • வெள்ளெலி நடனம்

குறிப்புதவிகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பாக்ஸ், ஸ்யூ. 2006. ஹாம்ஸ்டர்ஸ். டி.எஃப்.எச். பதிப்பகம் இங்க்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 பேரி, ஆண்மேரி. 1995. ஹாம்ஸ்டர்ஸ் ஆஸ் எ நியூ பெட். டி.எஃப்.எச். பதிப்பகம் இங்க்., என்.ஜே.
  3. 3.0 3.1 3.2 3.3 ஃபிரிட்ஷ், பீட்டர். 2008. ஹாம்ஸ்டர்ஸ்: எ கம்ப்ளீட் பெட் ஓனர்ஸ் மேனுவல். பேரன்ஸ் எடுகேஷனல் சீரிஸ் இங்க்., என்.ஒய்.
  4. டப்ளஸ் ஹார்பர், த ஆண்லைன் எடிமோலோஜி டிக்ஷனரி . “ஹாம்ஸ்டர்” என்று தேடலாம்.
  5. மிரியம்-வெப்ஸ்டரின் காலெஜியேட் டிக்ஷனரி, எஸ்.வி. "ஹாம்ஸ்டர்" (மே 29, 2008) Merriam-Webster.com
  6. 6.0 6.1 "ஹாம்ஸ்டர்." பிரிட்டானிகா கலைக்களஞ்சியம். வழக்கமான பதிப்பு. சிக்காகோ: பிரிட்டானிகா கலைக்களஞ்சியம், 2007.
  7. "Leonard Goodwin - Telegraph". The Daily Telegraph. 14 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • லெபடேவ், வி.எஸ்., என்.வி. இவனோவா, என்.கே பாவ்லோவா மற்றும் ஏ.பி. போல்டோராஸ். 2003. பேலீயார்க்டிக் வெள்ளெலியின் மூலக்கூற்று இன வளர்ச்சி வரலாறு (மோலிக்யூலார் ஃபைலோகெனி ஆஃப் பேலீயார்க்டிக் ஹேம்ஸ்டர்ஸ்). பேராசிரியர். ஐ. எம். குரோமோவின் 90வது விழாவை கௌரவிக்கும் வண்ணம் சர்வதேச மாநாட்டின் செயல்முறை ஆணையில் சிஸ்டமேடிக்ஸ், ஃபிலோஜினி அண்ட் பாலியண்டோலஜி ஆஃப் ஸ்மால் மாமல்ஸ் (ஏ. அவரியனாவ் மற்றும் என். அப்பர்சன் பதிப்பு) பற்றி பேசப்பட்டது. செயிண்ட்.பீட்டர்ஸ்பர்க்.
  • முசர் ஜி.ஜி மற்றும் எம்.டி கார்லேடன். 2005. முராய்டியா பிரதான குடும்பம். இன் மேமல் ஸ்பீஷீஸ் ஆஃப் த வேர்ல்டு ஏ டாக்சோனோமிக் அண்ட் ஜியாக்ராபிக் ரெஃபரன்ஸ் (டி.ஈ. வில்சன் மற்றும் டி.எம்.ரீடர் பதிப்பு). ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பதிப்பகம், பால்டிமோர்.
  • நியூமேன்.கே, ஜே. மிஷாக்ஸ், வி. லெபடேவ், என்.யிகிட், ஈ.கோலாக், என்.இவனோவோ, ஏ. போல்டோராஸ், ஏ. சுரோவ், ஜி.மார்கோவ், எஸ்.மாக். எஸ்.நியூமேன், ஆர்.காடர்மேன். 2006. நியூக்லியர் வி.டபுல்யூ.எஃப் (vWF) மரபணு மற்றும் மைடோகாண்ட்ரியல் சைடோக்ரோம் பி மற்றும் 12எஸ் ஆர்.ஆர்.என்.ஏ மரபணு ஆகியவற்றின் அடிப்படையில் கிரிகேடினே உட்குடும்பத்தின் மீது செய்யப்பட்ட அணுக்கூறு ஃபைலோகனி சோதனை. மாலிக்யூலர் ஃபைலோஜெனெடிக்ஸ் அண்ட் எவல்யூஷன், பதிப்பில் உள்ளது. இணையத்தளத்தில் கிடைக்கப்பெறும். 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cricetinae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வார்ப்புரு:Hamster

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளெலி&oldid=3925733" இலிருந்து மீள்விக்கப்பட்டது