உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு திருவீதி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு திருவீதி பிள்ளை, ஸ்ரீகிருஷ்ண பாதர் எனும் இயற்பெயருடன் சுவாதி நட்சத்திரம், ஆனி மாதத்தில் பிறந்து, திருவரங்கத்தில் மறைந்தவர். இவர் நம்பிள்ளையின் முக்கிய சீடர்களில் ஒருவர்.[1] வடக்கு திருவீதி பிள்ளையின் இரண்டு மகன்களில் மூத்தவர் பிள்ளை லோகாசாரியார், இளையவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆவார்.[2] வடக்கு வீதி பிள்ளை தனது குரு நம்பிள்ளை அருளால் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழிக்கு விளக்க உரையாக ஈடு 36,000 படி நூலை இயற்றினார்.

நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் ஈடு என்னும் சிறப்பு அடைமொழி உண்டு. இவற்றில் ஈடு என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.

இவற்றில் படி என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. vadakku thiruvIdhi piLLai
  2. azhagiya maNavALa perumAL nAyanAr