உள்ளடக்கத்துக்குச் செல்

மியான்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியன்மார் ஒன்றியக் குடியரசு
Republic of the Union of Myanmar
ပြည်ထောင်စု သမ္မတ မြန်မာနိုင်ငံတော်‌
Pyidaunzu Thanmăda Myăma Nainngandaw
கொடி of மியன்மார்
கொடி
இலச்சினை of மியன்மார்
இலச்சினை
நாட்டுப்பண்: 
  • கபா மா கியெய்
  • உலக முடிவு வரைக்கும்
அமைவிடம்: மியான்மர்  (green) in தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு  (dark grey)  —  [Legend]
Location of மியன்மார்
தலைநகரம்நைப்பியிதோ
பெரிய நகர்யங்கோன் (ரங்கூன்)
ஆட்சி மொழி(கள்)பருமிய மொழி
பிராந்திய மொழிகள்
  • ஜிங்போ
  • காயா
  • காரென்
  • சின்
  • மொன்
  • ரக்கைன்
  • சான்
Official scriptsபருமியம்
இனக் குழுகள்
([1])
சமயம்
தேரவாத பௌத்தம்
மக்கள்Burmese / Myanma
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்றம் குடியரசு (அரசு)
• சனாதிபதி
க்டின் கியவ்
• மாநில ஆலோசகர்
ஆங் சான் சூச்சி
மியின் சுவே
• 2ம் உப ஜனாதிபதி
ஹென்றி வான் தியோ
சட்டமன்றம்ஒன்றிய கூடல்
தேசிய இனங்களின் இல்லம்
பிரதிநிதிகளின் இல்லம்
உருவாக்கம்
23 திசம்பர் 849
16 ஒக்டோபர் 1510
29 பெப்ரவரி 1752
• சுதந்திரம்
(ஐக்கிய இராச்சியம்-இலிருந்து)
4 சனவரி 1948
• கோப் டேடாட்
2 மார்ச் 1962
• புதிய அரசியலமைப்பு
30 மார்ச் 2011
பரப்பு
• மொத்தம்
676,578 km2 (261,228 sq mi) (40வது)
• நீர் (%)
3.06
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
51,486,253[2] (25வது)
• அடர்த்தி
76/km2 (196.8/sq mi) (125வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• மொத்தம்
$269.996 பில்லியன்[3]
• தலைவிகிதம்
$5,207[3]
மொ.உ.உ. (பெயரளவு)2015 மதிப்பீடு
• மொத்தம்
$73.620 பில்லியன்[3]
• தலைவிகிதம்
$1,419[3]
மமேசு (2014)0.536[4]
தாழ் · 148வது
நாணயம்பர்மிய கியத் (K) (MMK)
நேர வலயம்ஒ.அ.நே+06:30 (MMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+95
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMM
இணையக் குறி.mm

மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) (myan-MAR-'[5] /miɑːnˈmɑːr/ (கேட்க) mee-ahn-MAR-',[6] /miˈɛnmɑːr/ mee-EN-mar or /mˈænmɑːr/ my-AN-mar (also with the stress on first syllable); பருமிய உச்சரிப்பு: [mjəmà]),[nb 1][7][8][9][10] என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர். வங்காளதேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த நாட்டின் 2014ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நாட்டின் மக்கள் தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக 51 மில்லியன் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[11] Myanmar is 676,578 square kilometres (261,227 sq mi) in size. முன்னைய தலைநகராக ரங்கூன் இருந்தது. பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் யங்கோன் ஆகும். [1]

மியன்மாரின் மேல் பர்மாவின் பியு நகர மாநிலங்களிலும், கீழ் பர்மாவில் மொன் இராச்சியத்திலும் திபெத்திய-பர்மிய மொழியை பேசிய முற்கால குடியேற்றவாதிகள் காணப்பட்டனர்.[12] 9ம் நூற்றாண்டில், பாமர் மக்கள் மேல் ஐராவதி பள்ளதாக்கிற்குள் நுழைந்ததன் பின் 1050களில் பகன் இராச்சியம் உருவாக்கப்பட்டது. பின்னர் பருமிய மொழி, கலாச்சாரம் மற்றும் தேரவாத பௌத்தம் போன்றன மெல்ல மெல்லமாக நாட்டின் உரித்தானவையாக மாறின. மொங்கோலிய படையெடுப்பின் காரணமாகவும், பல போரிடக்கூடிய மாநிலங்கள் எழுந்ததன் காரணமாகவும் பகன் இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. 16ம் நூற்றாண்டில், துங்கு வம்சத்தினால் மியன்மார் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதன் பின், இந்த நாடு தெற்காசியாவின் வரலாற்றில் குறுகிய காலத்திற்கு மிகப்பெரிய பேரரசாக எழுச்சியடைந்தது. [13] 19ம் நூற்றாண்டின் முற்காலத்தில் கொன்புங் வம்சம் நவீன மியன்மாரினை உள்ளடக்கிய ஒரு பகுதியையும், மணிப்பூர் மற்றும் அசாம் ஆகியவற்றையும் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தது. மியன்மாரை பிரித்தானியர் மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்களின் பின் 19ம் நூற்றாண்டில் கைப்பற்றினர். அதன் பின் மியன்மார் பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரித்தானிய குடியேற்ற நாடாக மாறியது. 1948 இல் மியன்மார் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகியது. முதலில் சனநாயக நாடாக இருந்து பின்னர் 1962ல் இராணுவ சர்வாதிகாரமாகிய கோப் டேடட்டாக மாறியது .

மியான்மர் இந்தியர்கள் வெளியேற்றம்

[தொகு]

ஜெனரல் நீ வின் ராணுவம் 1962 இல் ஆட்சியை கைப்பற்றி உடன் இந்தியர்களை வெளியேற்றும் வேலை ஆரம்பம் ஆனது . தனியார் வசம் இருந்த வியாபார நிறுவங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டு நஷ்டஈடு தராமல் தேசியமயம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டன, மூன்று லட்சம் இந்தியர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்து வெறும் 175 கியாட் பணத்துடன் உயிருக்கு அஞ்சி வெளியேறினர்.

இதன் அதிகமான சுதந்திர ஆண்டுகளில், மியன்மார் பெருத்த இனக் கலவரத்திற்காளாகியிருந்தது. மியன்மாரின் எண்ணற்ற இனக் குழுக்கள் நீண்ட நடக்கும் உள்நாட்டு போர்களுள் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு பல அமைப்புக்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக நிலையாகவும், ஒரு முறையாகவும் அறிக்கை வெளியிட்டன.[14][15][16] 2011இல், இராணுவ ஆட்சிக் குழு அதிகாரப்பூர்வமாக 2010 பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, பெயரளவில் சிவிலிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தலைவர்கள் நாட்டில் இன்னும் மகத்தான சக்தியை பிரயோகிக்க என்னும் பொது, பர்மிய இராணுவம் அரசாங்க ஆதிக்கத்தை அகற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக ஆங் சான் சூச்சி மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டின் மனித உரிமைகள் அறிக்கையும், வெளிநாட்டு உறவும் மேம்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார தடைகளும் தளர்த்தப்பட்டன.[17][18] ஆயினும், அரசாங்கத்தின் முசுலிம் ரோகிஞ்சா சிறுபான்மை சிறுபான்மை சிகிச்சை பற்றியும், மத மோதல்கள்களைக் கருத்தில் கொள்வது குறைவு பற்றியும் தொடர்ந்தும் விமர்சனம் வெளியாகின்றன. [19][20][21] 2015 தேர்தலில், ஆங் சான் சூச்சியின் கட்சி இரு இல்லங்களிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.

மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன.[3] மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[22][23] As of 2013ல், மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது.[4]

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.

பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது விகாரைகளின் பூமி ('Land of Pagodas') என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "[[சுவேதகோன் விகாரை]" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர். தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான ரோஹிங்கிய என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது. [24]

சொற்பிறப்பு (பெயர் வரலாறு)

[தொகு]

1989ல், இராணுவ அரசாங்கம் பர்மாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்ட பல பெயர்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக மாற்றியது. தனது நாட்டின் பெயரான "பர்மாவை" "மியன்மார்" என மாற்றியதும் இதற்குள் அடங்குகிறது. மிகுதி பெயர்மாற்றங்கள் போட்டியிட்ட சிக்கல்களாகவே விளங்குகின்றன.[25] பல அரசியல் மற்றும் இன எதிர்புக் குழுக்களும், நாடுகளும் "பர்மா" என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. ஏனென்றால், அவை ஆட்சி செய்கின்ற இராணுவ அரசாங்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்காமையினாலேயே ஆகும். அல்லது அதன் பெயர்மாற்றல் அதிகாரத்தினாலேயோ இருக்கலாம்.[26]

மியன்மார் நாட்டின் அதிகாரபூர்வமான முழுப்பெயர் "மியன்மார் ஒன்றியக் குடியரசு" (ஆங்கிலம் : "Republic of the Union of Myanmar", ပြည်ထောင်စုသမ္မတ မြန်မာနိုင်ငံတော်, Pyidaunzu Thanmăda Myăma Nainngandaw, pronounced: [pjìdàʊɴzṵ θàɴməda̰ mjəmà nàɪɴŋàɴdɔ̀]) ஆகும். மியன்மார் என்ற பெயரை பயன்படுத்த விரும்பாமல் பழைய காலத்து பெயரையே பயன்படுத்த விரும்பும் நாடுகள் "பர்மா குடியரசு" (ஆங்கிலம் : "Union of Burma" )என அழைக்கின்றன.[27][28]

ஆங்கிலத்தில், இந்த நாடு பிரசித்தியாக "பர்மா" ("Burma") என்றோ அல்லது "மியன்மார்" ("Myanmar") /ˈmjɑːnˌmɑːr/ (கேட்க) அழைக்கப்படுகிறது.[6] இந்த இரண்டு பெயர்களும் பர்மியர்களின் பெரும்பான்மை இனக்குழுவான பாமர்களிடமிருந்தே பெறப்பட்டன. மியன்மார் என்ற பெயர் இந்த பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். பர்மா என்ற பெயர் "பாமர்" என்பதில் இருந்து வந்ததாகும். இப்பெயர் பாமர் இனக்குழுவின் பேச்சு வழக்கு பெயராகும். பதிவின் படி பார்க்கையில், இவற்றின் உச்சரிப்பு பாமா (pronounced: [bəmà]) அல்லது மியமா (pronounced: [mjəmà]) என்று வருகின்றன. 18ஆம் நூற்றாண்டிலிருந்து "பர்மா" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முன்னைய இந்து, சமசுகிருதம் போன்றவற்றின் வேதங்கள் பர்மாவில் ब्रह्मावर्त / ब्रह्मदेश (பிரம்மவார்ட்/ பிரமதேசு, Brahmavart/Brahmadesh). இது 'இந்துக் கடவுள் பிரம்மாவின் பூமி' ('Land of Hindu god Bramha') எனக் குறிப்பிடுகிறது.

ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகளின் அரசாங்கம் ஆங்கிலத்தில் பர்மா என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன.[29][30] அதிகாரபூர்வ ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொள்கை பர்மா என்ற பெயரையே இந்நாட்டிற்கு வைத்துள்ளது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் வலைத்தளம் இந்நாட்டின் பெயரை "பர்மா (மியன்மார்)" என்றே பட்டியலிட்டுள்ளது. பராக் ஒபாமா மியன்மார் நாட்டிற்கு இரண்டு பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றார்.[31][32][33] செக் குடியரசு அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது, இருப்பினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது வலைத்தளத்தில் மியன்மார், பர்மா ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளது. [34] தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உருசியா, ஜெர்மனி,[35] சீனா, இந்தியா, நோர்வே,[36] மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் போன்று ஐக்கிய நாடுகள் அவையும் மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது.[29]

பிபிசி,[37] சிஎன்என்,[38] அல் ஜசீரா,[39] ராய்ட்டர்ஸ்,[40] மற்றும் ஆர்டி (ரசியா டுடே) உள்ளிட்ட அதிகமான ஆங்கில மொழி மூலமான செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.

இசுப்பானியம், இத்தாலியன், உரோமானியன் போன்ற மொழிகளில் மியன்மார் "பிர்மானியா" ("Birmania") என்று அழைக்கப்படுகின்றது. "பிர்மானியா" என்பது பர்மா என்பதின் இசுப்பானிய மொழிபெயர்ப்பாகும். மியன்மார் போர்த்துக்கேய மொழியில் "பிர்மனியா" ("Birmânia") என்றும், பிரான்சிய மொழியில் "பிர்மனி" ("Birmanie") என்றும் அழைக்கப்படுகின்றது.[41] பிரேசில், போர்த்துக்கல் போன்ற போர்த்துகேய மொழி பேசும் நாடுகளும், பிரான்சு போன்ற பிரெஞ்ச் மொழி பேசும் நாடுகளும் தற்போது பிரதானமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.[42]

வரலாறு

[தொகு]

முற்கால வரலாறு

[தொகு]
எட்டாம் நூற்றாண்டில் பியூ சிட்டி-இசுடேட்சு; பகான் ஒப்பிடுகைக்கு மட்டுமே, இது சமகாலம் அல்ல.

மியான்மர் என அழைக்கப்படும் இப் பிரதேசத்தில் 400,000 ஆண்டுகளுக்கு முன் ஓமோ எரெக்டசு (') என்ற அழிந்த இனம் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.[43] மியான்மரில் ஒமோ சபியென்சு (') இனம் வாழ்ந்ததற்கு முதல் ஆதாரமாக கி.மு. 11,000 ஆண்டளவில் அன்யதியன் எனும் கற்கால காலாசாரமும், கற்கால ஆயுதங்களும் மத்திய மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். மியான்மரில் புதிய கற்காலத்திற்கு ஆதாரமாக கி.மு. 10,000ற்கும் கி.மு. 6,000ற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மரங்கள் மற்றும் விலங்குகளை வீட்டில் வளர்த்தலும், கூராக்கப்பட்ட கல் ஆயுதங்களும் கொண்ட குகை ஓவியங்கள் படா-லின் குகைகளில் கண்பிடிக்கப்பட்டமை ஆகும்.[44]

இன்வா மடாலயம்

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The final "r" in "Myanmar" was not intended for pronunciation, but was added to represent the broad "ah"-sound of பிரித்தானிய ஆங்கிலம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The World Factbook – Burma". cia.gov. Archived from the original on 17 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. The 2014 Myanmar Population and Housing Census Highlights of the Main Results Census Report Volume 2 – A. Department of Population Ministry of Immigration and Population. 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Burma (Myanmar)". World Economic Outlook Database, April 2014. International Monetary Fund. September 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  4. 4.0 4.1 "2015 Human Development Report Summary" (PDF). United Nations Development Programme. 2015. pp. 21–25. பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
  5. Martha Figueroa-Clark (26 September 2007). "How to say Myanmar". Magazine Monitor. An occasional guide to the words and names in the news from Martha Figueroa-Clark of the BBC Pronunciation Unit. BBC.
  6. 6.0 6.1 "Myanmar — Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012.
  7. Thackrah, J. R. "Definition of Myanmar". Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012.
  8. "Definition of Myanmar — Oxford Dictionaries (British & World English)". Oxford Dictionaries. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Ammon, Ulrich (2004). Sociolinguistics: An International Handbook of the Science of Language and Society. Vol. Volume 3/3 (2nd ed.). Walter de Gruyter. p. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-018418-4. {{cite book}}: |volume= has extra text (help)
  10. "Myanmar". Thefreedictionary.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
  11. "Asian Development Bank and Myanmar: Fact Sheet" (PDF). Asian Development Bank. 30 April 2012. Archived from the original (PDF) on 19 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 November 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. O'Reilly, Dougald JW (2007). Early civilizations of Southeast Asia. United Kingdom: Altamira Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
  13. Lieberman, p. 152
  14. "Burma". Human Rights Watch. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
  15. "Myanmar Human Rights". Amnesty International USA. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
  16. "World Report 2012: Burma". Human Rights Watch. Archived from the original on 30 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. Madhani, Aamer (16 November 2012). "Obama administration eases Burma sanctions before visit". USA Today. https://www.usatoday.com/story/theoval/2012/11/16/obama-lifts-sanctions-burma-visit/1710253/. 
  18. Fuller, Thomas; Geitner, Paul (23 April 2012). "European Union Suspends Most Myanmar Sanctions". The New York Times. https://www.nytimes.com/2012/04/24/world/asia/eu-suspends-sanctions-on-myanmar.html. 
  19. Greenwood, Faine (27 May 2013). "The 8 Stages of Genocide Against Burma's Rohingya | UN DispatchUN Dispatch". Undispatch.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
  20. "EU welcomes "measured" Myanmar response to rioting". Retuer. 11 June 2012 இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120806072509/https://www.reuters.com/article/2012/06/11/us-myanmar-violence-idUSBRE85A01C20120611. 
  21. "Q&A: Communal violence in Burma". BBC. https://www.bbc.co.uk/news/world-asia-18395788. பார்த்த நாள்: 14 October 2013. 
  22. Eleven Media (4 September 2013). "Income Gap 'world's widest'". The Nation இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140915230853/https://www.nationmultimedia.com/aec/Income-gap-worlds-widest-30214106.html. பார்த்த நாள்: 15 September 2014. 
  23. McCornac, Dennis (22 October 2013). "Income inequality in Burma". Democratic Voice of Burma இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140915230920/https://www.dvb.no/analysis/income-inequality-in-burma/33726. பார்த்த நாள்: 15 September 2014. 
  24. ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சினையில் சூச்சியின் தலையீடு தேவை: தலாய் லாமா தி இந்து தமிழ் 30 மே 2015
  25. Houtman, Gustaaf (1999). Mental culture in Burmese crisis politics. ILCAA Study of Languages and Cultures of Asia and Africa Monograph Series No. 33. Institute for the Study of Languages and Cultures of Asia and Africa. pp. 43–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-87297-748-6.
  26. Steinberg, David I. (2002). Burma: The State of Myanmar. அச்சகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம். p. xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58901-285-2.
  27. "Burma". The World Factbook. Central Intelligence Agency. Archived from the original on 17 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  28. "Government of the Union of Burma". பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  29. 29.0 29.1 Dittmer, Lowell (2010). Burma Or Myanmar? The Struggle for National Identity. World Scientific. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814313643.
  30. "UK and Burma". Foreign and Commonwealth Office. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
  31. "Burma or Myanmar? Obama calls it both on visit" (News and blogging). Asian Correspondent. அசோசியேட்டட் பிரெசு (Bristol, England: Hybrid News Limited). 19 November 2012 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121121120002/https://asiancorrespondent.com/92211/burma-or-myanmar-obama-calls-it-both-on-visit/. பார்த்த நாள்: 19 November 2012. "Yangon, Burma (AP) — Officially at least, America still calls this Southeast Asian nation Burma, the favored appellation of dissidents and pro-democracy activists who opposed the former military junta's move to summarily change its name 23 years ago." 
  32. "Hosting Burma's Leader, Obama Repeatedly Calls the Country 'Myanmar'". CNS News. 21 May 2013. https://cnsnews.com/news/article/hosting-burma-s-leader-obama-repeatedly-calls-country-myanmar. பார்த்த நாள்: 30 July 2013. 
  33. "Burma (Myanmar)". United States Department of State. Archived from the original on 10 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  34. "The Ministry of Foreign Affairs of the Czech Republic provides CZK 2.5 million of immediate assistance to flood victims in Myanmar/Burma". Ministry of Foreign Affairs of the Czech Republic. 7 August 2015. https://www.mzv.cz/yangon/en/the_ministry_of_foreign_affairs_of_the.html. பார்த்த நாள்: 8 November 2015. 
  35. "Burma vs. Myanmar: What's in a Name". DW. 1 September 2007. https://www.dw.de/burma-vs-myanmar-whats-in-a-name/a-2804762. பார்த்த நாள்: 2 August 2013. 
  36. Mudditt, Jassica (19 November 2012). "Burma or Myanmar: Will the US make the switch?" இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130321003449/https://mmtimes.com/index.php/special-features/153-sanctions-to-sucess/3187-burma-or-myanmar-will-the-us-make-the-switch.html. பார்த்த நாள்: 2 August 2013. 
  37. "Myanmar profile". BBC News. 16 July 2013. https://www.bbc.co.uk/news/world-asia-pacific-12990563. 
  38. "Myanmar Fast Facts — CNN.com". CNN. 30 July 2013. https://edition.cnn.com/2013/07/30/world/asia/myanmar-fast-facts. 
  39. "Myanmar blast hits anti-Muslim monk's event — Asia-Pacific". Al Jazeera. 22 July 2013.
  40. "Myanmar". Reuters. 9 February 2009 இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140317121843/https://uk.reuters.com/places/myanmar. 
  41. "" Birmanie ou Myanmar ? Le vrai faux débat francophone " – La France en Birmanie". Ambafrance-mm.org. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  42. "Sala de Imprensa: Situação em Mianmar". Institutional website (Itamaraty). 27 September 2007. https://www.itamaraty.gov.br/sala-de-imprensa/notas-a-imprensa/2007/09/27/situacao-em-mianmar/. 
  43. Bowman, John Stewart Bowman (2013). Columbia Chronologies of Asian History and Culture. Columbia University Press. p. 476. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50004-3.
  44. Cooler, Richard M. (2002). "The Art and Culture of Burma (Chapter 1)". DeKalb: Northern Illinois University. Archived from the original on 2016-12-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மர்&oldid=3779806" இலிருந்து மீள்விக்கப்பட்டது