பெர்னான்டோ டி நோரன்கா
உள்ளூர் பெயர்: ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ | |
---|---|
டோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 3°51′13.71″S 32°25′25.63″W / 3.8538083°S 32.4237861°W |
தீவுக்கூட்டம் | ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ |
மொத்தத் தீவுகள் | 21 |
முக்கிய தீவுகள் | பெர்னான்டோ டி நோரன்கா; இலா ரட்டா; இலா டோ மியோ; இலா செலா கினெடா; இலா ரசா |
பரப்பளவு | 26 km2 (10 sq mi) |
நீளம் | 10 km (6 mi) (பெர்னான்டோ டி நோரன்கா தீவு) |
அகலம் | 3.5 km (2.17 mi) (பெர்னான்டோ டி நோரன்கா தீவு) |
உயர்ந்த ஏற்றம் | 323 m (1,060 ft) |
உயர்ந்த புள்ளி | மோர்ரோ டொ பைக்கோ |
நிர்வாகம் | |
பிரேசில் | |
மண்டலம் | வடகிழக்கு மண்டலம் |
மாநிலம் | பெர்னம்புகோ |
பெரிய குடியிருப்பு | விலா டோசு ரெமெடியோசு |
மக்கள் | |
மக்கள்தொகை | 2,718[1] (2012) |
மேலதிக தகவல்கள் | |
அதிகாரபூர்வ இணையதளம் | www.Noronha.pe.gov.br |
அலுவல் பெயர் | Brazilian Atlantic Islands: Fernando de Noronha and Atol das Rocas Reserves |
வகை | Natural |
வரன்முறை | vii, ix, x |
தெரியப்பட்டது | 2001 (25th session) |
உசாவு எண் | 1000 |
State Party | Brazil |
Region | Latin America and the Caribbean |
பெர்னான்டோ டி நோரன்கா (Fernando de Noronha) பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km (220 mi) தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும். பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு 18.4 சதுர கிலோமீட்டர்கள் (7.1 sq mi) ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன.[1] இப்பகுதி பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்திற்கு அண்மையில் இருந்தபோதும் பெர்னம்புகோ மாநிலத்தின் சிறப்பு நகராட்சி (distrito estadual) ஆக உள்ளது.[2]
இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் நேர வலயம் ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-02:00 ஆகும். ரெசிஃபியிலிருந்து (545 km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது நதாலிலிருந்து (360 km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம்.[3] இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காட்சிக்கூடம்
[தொகு]-
தீவுக்குழுமத்தின் நிலப்படம்
-
பெர்னான்டோ டி நோரான்காவின் நிலப்பரப்பு
-
தீவுக்குழுமத்தின் தொன்மையான பாதுகாப்பு
-
வான்வழி காட்சி
-
பளிங்குபோன்ற நீர்
-
நீரடிக் காட்சி
-
சாஞ்சோ விரிகுடா
-
டோல்பின் விரிகுடா
-
மோர்ரோ டோயிசு இர்மோசு (இரு சகோதரர்கள் குன்று)
-
காசிம்பா டோ பாத்ரெ
-
காசிம்பா டோ பாத்ரெ கடற்கரை
-
போன்டா டா சபாட்டா
-
மோர்ரோ டோயிசு இர்மோசு
-
சூரிய அஸ்தமனம்
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 IBGE (Brazilian Institute of Geography and Statistics) (2012). "IBGE - Cidades - Pernambuco - Fernando de Noronha - Estimativa da População - 2012" (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Fernando de Noronha - Transfer Aeroporto Porto de Galinhas, Locação de Veículos e Buggys, Passeios, Transfer em Van, Zafira, Dobló". Turismodonordeste.com. Archived from the original on 2018-08-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "Fernando de Noronha - Pimentel lamenta suspensão de cruzeiro - Assembleia Legislativa do Estado de Pernambuco". Alepe.pe.gov.br. Archived from the original on 2012-02-25. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிமூலத்தில் பெர்னான்டோ டி நோரன்கா பற்றிய ஆக்கங்கள்
- (போர்த்துக்கேயம்) பெர்னான்டோ டி நோரான்கோ பரணிடப்பட்டது 2005-05-23 at the வந்தவழி இயந்திரம் அலுவல்முறை வலைத்தளம்
சுற்றுலா
- (ஆங்கிலம்) தீவின் ஒளிப்பட சுற்றுலா PVV.org
- (ஆங்கிலம்) /(செருமன் மொழி) உள்ளூர்வாசி ஒருவரின் தகவல்
- (ஆங்கிலம்) பெர்னான்டோ டி நோரான்கோவில் வாழ்க்கை குறித்து அங்கு வாழ்பவருடன் ஒலிய நேர்காணல் பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
ஒளிதங்கள்