புனித தோமா சிரிய-மலபார் தேவாலயம், மலையாற்றூர்
புனித தாமஸ் சர்வதேச ஆலயம் | |
---|---|
St Thomas International Shrine, Malayattoor, Angamaly | |
10°12′58″N 76°30′32″E / 10.216°N 76.509°E | |
அமைவிடம் | கேரளம் எர்ணாகுளம் அங்கமாலி மலையாற்றூர் |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | சிரோ-மலபார் கத்தோலிக்க (சர்வதேச ஆலயம்) |
புனித தாமஸ் சிரோ மலபார் கத்தோலிக் சர்வதேச ஆலயம், மலையாற்றூர் (அல்லது மலையாற்றூர் தேவாலயம் ,The St Thomas Syro malabar catholic International Shrine, Malayattoor (or Malayatoor Church) என்பது உலகின் எட்டு சர்வதேச ஆலயங்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி மலையாற்றூரில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மலையாற்றூர் குன்றின்மீது 609 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மலையாற்றூர் தேவாலயத்துக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள தேவாலயம் உலகின் எட்டு சர்வதேச ஆலயங்களில் ஒன்றாக திரு ஆட்சிப்பீடத்தால் நியமிக்கப்பட்டுள்ளது. [1] [2] கேரளத்தில் (அன்றைய தமிழகத்தில்) கிறித்தவத்தைப் பரப்புவதற்கு முன்முயற்சி எடுத்தவர் புனித தாமஸ் அப்போஸ்தலன். இவர் கேரளத்தில் தரையிறங்கியபோது, இந்த தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது. மலையாற்றூர் தேவாலயமானது காலடி நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், கொச்சியில் இருந்து 47. கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மலையாற்றூர் மற்றும் கொடநாடு கிராமங்கள் பெரியாறின் எதிர்க்கரையில் அமைந்துள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ "International and National Shrines". gcatholic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
- ↑ "The Hindu : Kerala / Kochi News : Malayattoor church festival held". hindu.com. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.