பார்வை அளவையியல்
பார்வை அளவையாளர் குறியீடு; இது உச்சியில் கண் அமைந்த வாலாகும். | |
தொழில் | |
---|---|
பெயர்கள் |
|
வகை | சிறப்புப் புலம் |
செயற்பாட்டுத் துறை | உடல்நலம் |
விவரம் | |
தகுதிகள் | கண்நோய், மருத்துவப் பண்டுவம், பார்வை மருத்துவம், இருநோக்குப் பார்வை, மூக்குக் கண்ணாடிகள்,
தொடுவில்லைகள் |
தேவையான கல்வித்தகைமை | இளமறிவியல் (பார்வை அளவையியல்)/ பார்வை அளவையியல் இளவல்/ பார்வை அளவையியல் முதுவர்/பார்வை
அளவையியல் மருத்துவர் |
தொழிற்புலம் | மருத்துவ மனை, மருத்துவகம், மருத்துவ ஆய்வகம் |
தொடர்புடைய தொழில்கள் | மருத்துவமனைப் பார்வை அளவையாளர், கண்மருத்துவர் |
பார்வை அளவையியல் (Optometry) உடல்நலம் (குறிப்பாக, கண்) சார்ந்த துணை மருத்துவப் படிப்பு ஆகும். இது கண் நலன், பார்வை கூர்மை, பார்வையோடு இணைந்த மூளையின் நலம், கண் கண்ணாடிகள், கண் ஓர்வுகள், ஒளிக் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டப் படிப்பாக கருதப்படுகிறது. பார்வை அளவையியல் படித்தவர்கள் கண் பார்வை ஓர்வு (சோதனை) வல்லுனர்கள் என அழைக்கப் படுகிறார்கள்.
கண் பார்வை சோதனை வல்லுனர்கள், கண் மருத்துவர்கள் அல்லர். கண் சார்ந்த மருத்துவர்கள் கண் மருத்துவர் (ophthalmologist) அல்லது கண் நரம்பியலாளர் அல்லது அறுவை மருத்துவர் (Eye Surgeon) எனப்படுவர்கள் கண் மருத்துவம் மற்றும் கண் அறுவையைச் செய்ய சிறப்பு மருத்துவ பட்டப் படிப்பை படித்த மருத்துவர்கள் ஆவர். பார்வை சோதனை வல்லுனர்கள் கண் மருத்துவர்களுக்கு உதவி செய்கிறார்கள். எனவே, மேற்கண்ட படிப்பு கண் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்பாக கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]பார்வை அளவையியலின் வரலாறு பின்வரும் அறிவியல் மருத்துவப் புலங்களின் வளர்ச்சியைச் சார்ந்ததாகும்
- பார்வை அறிவியல் (மருத்துவம், நுண்ணுயிரியல், நரம்பியல், உடலியக்கவியல், உளவியல் ஆகிய புலங்களோடு தொடர்புடையது.)
- ஒளியியல், ஒளியியல் கருவிகள்
- ஒளியியல் கருவிகள், படிமப் பதிவு நுட்பங்கள்
- பிற கண் நலத் தொழில்கள்
பார்வை அளவையியலின் வரலாற்றை ஒளியியல் ஆய்வு, கண் படிமம் உருவாதல் சார்ந்த ஆய்வில் இருந்து பின்னோக்கிப் பார்க்கலாம். பார்வை அளவை அறிவியலின் தோற்றம் (இயற்பியல் வகுப்பில் ஒளியியலைக் கற்பிப்பில் இருந்து) கி.மு ஆயிரமாண்டுகளுக்கு முன்பு, அப்போது அழகுபடுத்துவதற்கான வில்லைகள் வழக்கில் இருந்ததால், கொண்டு செல்லலாம். முதல் கண் கண்ணாடி எப்போது செய்யப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. பிரித்தானிய அறிவியலாளர் ஜோசப் நீதாம் தனது Science and Civilization in China எனும் நூலில் கண் கண்ணாடிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.[1]
மாறாக, அமெரிக்க ஆய்வாளரான டேவிட் ஏ. கோசு ( A. Goss) இவை தனித்து 13 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றியிருக்கலாம் எனக் கூறுகிறார். இவர் இதை 1305 ஆம் ஆண்டு இத்தாலியக் கையெழுத்துப்படி ஒன்றில் பிசா நகரத் துறவியன இரிவால்தோ "கண் கண்ணாடி செய்யும் கலை கண்டுபிடித்து இன்னும் இருபது ஆண்டுகள் முடியவில்லை" எனக் கூறுவதை வைத்துக் கூறுகிறார்.[2] இத்தாலியிலும் செருமனியிலும் நெதர்லாந்திலும் 1300 களில் கண் கண்ணாடிகள் செய்யப்பட்டன.
பயிற்சி, உரிமம் தரல், தொழில் நடைமுறை
[தொகு]பல நாடுகளில் பார்வை அளவையியல் அலுவல் முறையாக ஏற்கப்பட்டுள்ளது.[3] இத்துறைக்கன கல்வியும் நடைமுறையும் பற்றி பெரும்பாலான நாடுகள் சட்ட ஒழுங்கு முறைகளை வகுத்துள்ளன. மற்ற உடல்நல தொழில்முறை வல்லுனர்களைப் போலவே பார்வை அளவையாளர்கள், தம் தொழில் வல்லமையை இற்றைப்படுத்திக் கொள்ள தொடர்நிலைக் கல்வியில் பங்குபற்ற வைக்கப்படுகின்றனர். பார்வை அளவையியலின் உலக மன்றம் வலைத்தள வாயிலைப் பெற்றுள்ளது. இது 46 நடுகளில் உள்ள கண் நலப் பணியாளருக்கு அடிப்படைத் தகவல்களை வழங்குகிறது.
இந்தியா
[தொகு]இந்தியா 2010 இல் 115,000 பார்வை அளவையாளர்கள் தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளது; ஆனால், அப்போது இந்தியாவில் ஏறத்தாழ, நான்கண்டு பயிற்சி பெற்ற 9,000 பார்வை அளவையாளர்களும் (இரண்டாண்டு பயிற்சி பெற்ற 40,000 பார்வை அளவையாளர்களும் இருந்தனர் .[4] பார்வையின்மையையும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க இந்தியாவில் மேலும் நன்றாக பயிற்சி பெற்ற கூடுதலான பார்வை அளவையாளர்கள் தேவைப்பட்டனர்.[5] பார்வை அளவையியலுக்கான வரையறை பல நாடுகளில் பலவகைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.[6] இந்தியாவுக்குப் பன்னாட்டுத் தரம் வாய்ந்த நான்காண்டு பட்டம் தரும் பள்ளிகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.
பள்ளி மணவர்கள் தரங்குறைந்த கண்ணாடி அணிந்தமையால் கணிசமானோர் பார்வை இழந்ததாக 2013 இல் இந்திய பார்வை அளவையியல் இதழ் அறிவித்துள்ளது.[7]
பார்வை அளவையியல், பார்வை அறிவியல் இதழ் 2015 இல் பார்வை அளவையாளர்கள் இருநோக்குப் பர்வை, பார்வைக் குறைவு சார்ந்த ஆழமான கூடுதல் பயிற்சியும் அக்கறையும் பெறவேண்டும் என அறிவித்துள்ளது.[8]
இந்தியாவில் பயிற்சி
[தொகு]அண்மையில் இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட பார்வை அளவையியல் பள்ளிகள் உள்ளன. இரண்டு பார்வை அளவையியல் பள்ளிகள் 1958 இல் திறக்கப்பட்டன. அவை உத்திரப் பிரதேசம் காந்தி கண் மருத்துவமனையில் ஒன்றும் தெலங்கானாவில் ஐதராபத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவ மனையில் ஒன்றுமாக அமைந்தன. இவை இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய அரசின் உடல்நலச் சேவைகள் பொது இயக்குநரால் உருவாக்கப்ப்பட்டன. இப்பள்ளிகள் இரண்டாண்டு பார்வை அளவையியல் பட்டயத்தைத் தந்தன. இவை மாநில மருத்துவப் புலங்களால் ஏற்கப்பட்டன.
பின்னர், நான்கு பர்வை அளவையியல் பள்ளிகள் உத்திரப் பிரதேசத்தில் சித்தாப்பூரிலும் (சித்தாப்பூர் கண் ம்ருத்துவமனையில்) தமிழ்நாட்டில் சென்னையிலும் கருநாடகத்தில் பெங்களூருவிலும் கேரளாவில் திருவனந்தபுரத்திலும் அமைக்கப்பட்டன.[9]
சென்னையில் 1985 இல் எலைட் பார்வை அளவையியல் பள்ளி நிறுவப்பட்டது. இது தான் முதன்முதலாக, நான்காண்டு பட்டப் படிப்பை வழங்கியது.
பார்வை அளவையியலில் இளவல் பட்டமும் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் இந்தியவின் பல்கலைக்கழக நல்கைக் குழுவால் ஏற்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன;[10] இந்தியப் பல்கலைக்கழக நல்கைக் குழு இந்தியாவில் உயர்கள்விச் செந்தரங்களைப் பேணும் சட்டவியலான அமைப்பாகும். இந்தியாவில் பார்வை அளவையாளர்கள் இந்தியப் பார்வை அளவையியல் மன்றத்தில் பதிய ஊக்கப்படுத்தப்படுகின்றனர்; இது இந்தியக் குழுமச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட சட்டவியலான தன்னாட்சி நிறுவனமாகும்.[11]
அண்மையில், இப்படிப்பை திறந்தநிலைப் பல்கலைக் கழங்களும் வழங்க ஏதுவாக தொலைநிலைக் கல்வி இயக்கக ( Directorate of Distance Education) ஒப்புதலும் வழங்கப் பட்டுள்ளது. திறந்த நிலை வழி பார்வை அளவையியல் படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் வடிவமைத்து வழங்கி வருகிறது. பார்வை அளவையியல் துணை மருத்துவப் படிப்பாகையால், மருத்துவப் பல்கலைக் கழங்கங்கள் மட்டுமல்லாமல், பல்கலைக் கழக நல்கைக் குழுவால் ஏற்கப்பட்ட எந்த ஒரு பல்கலைக் கழகத்தின் வாயிலாகவும் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 38 பல்கலைக் கழகங்கள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை அளவையியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
தமிழகம்
[தொகு]பின் வரும் பல்கலைக் கழகங்கள் பார்வை அளவையியல் பட்டப் படிப்பை ஒப்புதல் வழங்கப்பட்ட கல்லூரிகள் மூலம் வழங்குகின்றன
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்
- பெரியார் பல்கலைக் கழகம், சேலம்
- அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி
- பாரதியார் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்.
மேற்கண்ட பல்கலைக் கழகங்கள் தமிழக அரசால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்கள் ஆகும். இதுமட்டுமல்லாமல் பின்வரும் தனியார் பல்கலைக் கழகங்களும் மேற்கண்ட பட்டப் படிப்பை வழங்குகின்றன.
- இராமச்சந்திரா பல்கலைக் கழகம், சென்னை
- வினாயகா மிஷன் பல்கலைக் கழகம், சேலம்
- எஸ் ஆர் எம் பல்கலைக் கழகம், சென்னை
இந்திய அளவில், இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்லூரிகள் வாயிலாகவும் தமிழகத்தில் பார்வை அளவையியல் படிப்புகள் வழங்கப் படுகின்றன.
தமிழகப் பார்வை அளவையியல் கல்லூரிகளின் பட்டியல்
[தொகு]- டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பிரகாஷ் பார்வை அளவையியல் நிறுவனம், சென்னை
- வாசன் கண்மருத்துவ நிறுவனம், சென்னை
- எலைட் பார்வை அளவையியல் பள்ளி, சங்கர நேத்திராலயா சென்னை
- எம் என் பார்வை அளவையியல் பள்ளி , சென்னை
- டாக்டர். ஆனந்த் பார்வை அளவையியல் கல்லூரி மற்றும் பார்வை அறிவியல் கல்லூரி, சேலம்
- லோட்டஸ் பார்வை அளவையியல் நிறுவனம், கோயமுத்தூர்
- ஜோசப் பார்வை அளவையியல் பள்ளி , ஜோசப் கண் மருத்துவமனை , திருச்சி.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sir Joseph Needham. "Science and Civilization in China—Volume 4: Physics and Physical Technology; Part 1: Physics பரணிடப்பட்டது 2016-08-23 at the வந்தவழி இயந்திரம். Monoskop.org. Retrieved 1 June 2015.
- ↑ "History of Optometry" (PDF). Archived from the original (PDF) on 14 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Agarwal, R. (2000), Optometry as an international profession, British Journal of Optometry and Dispensing, 8(4), 120.
- ↑ Anon (2010), Organization and Institution News, Plan to boost Indian optometry endorsed, Optometry and Vision Science, Volume 87, Number 7, page 520.
- ↑ Anon (2011), Eye care for 11 million vision impaired children in India, Optometry and Vision Science, Volume 88, number 12, page 1532.
- ↑ Agarwal, R. K. (1985), Optometry in the Indian sub-continent, Optometry Today, Volume 25, No. 14, page 475 (published by the Association of Optometrists, London, England)
- ↑ "Spectacle compliance amongst rural secondary school children in Pune district, India.". Indian J Ophthalmol 61 (1): 8–12. 2013. doi:10.4103/0301-4738.99996. பப்மெட்:23275214.
- ↑ "Pattern of optometry practice and range of services in India". Optom Vis Sci 92: 615–22. 2015. doi:10.1097/OPX.0000000000000587. பப்மெட்:25875681.
- ↑ Agarwal, R. K. (1970), Optometry in India, The Optician, 3 July, page 18 (published in London, England).
- ↑ https://www.ugc.ac.in/oldpdf/regulations/specificationofDegrees.pdf
- ↑ "Career as an Optometrist - Optometry Council of India". Archived from the original on 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
தகவல் வாயில்கள்
[தொகு]- https://www.oregonoptometry.org
- https://oaop.org/oaop பரணிடப்பட்டது 2013-11-04 at the வந்தவழி இயந்திரம்
- https://idaho.aoa.org
- https://web.archive.org/web/20131021065719/https://washington.aoa.org/
- https://www.njsop.org/aws/NJSOP/pt/sp/home_page
- https://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=2012;volume=60;issue=5;spage=401;epage=405;aulast=De