சனவரி 21
Appearance
<< | சனவரி 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXV |
சனவரி 21 (January 21) கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர்.
- 1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
- 1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.
- 1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754-இல் மீளக் கட்டப்பட்டது.
- 1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
- 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
- 1801 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது.[1]
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார்.
- 1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.
- 1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
- 1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.
- 1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.
- 1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
- 1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.
- 1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.
- 1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
- 1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.
- 1995 – கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.[2]
- 2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
- 2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசிப் பழங்குடி இறந்தார்.
- 2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 2009 – காசாக்கரையில் இருந்து இசுரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.
- 2011 – அல்பேனியா, டிரானாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
- 2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.
- 2017 – அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.[3]
பிறப்புகள்
- 1863 – பிரம்மானந்தர், தமிழக ஆன்மிகவாதி (இ. 1922)
- 1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு, மந்திரவாதி (இ. 1916)
- 1908 – பெங்கித் சுட்டிராம்கிரன், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1987)
- 1919 – அரிசரண் சிங் பிரார், இந்திய-பஞ்சாப் அரசியல்வாதி (இ. 2009)
- 1923 – உலோலா புலோறேஸ், எசுப்பானியப் பாடகி (இ. 1995)
- 1924 – மது தண்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2005)
- 1935 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 1991)
- 1928 – யீன் சார்ப், அமெரிக்க அரசியல் அறிவியலாளர்
- 1941 – எலைன் ஷோவால்டர், அமெரிக்க எழுத்தாளர்
- 1949 – துருஒங் டான் சாங், வியட்நாமின் 7-வது அரசுத்தலைவர்
- 1952 – பிரதீப் ரவட், இந்தியத் திரைப்பட நடிகர்
- 1953 – பவுல் ஆல்லென், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்
- 1957 – கி. சிவநேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2008)
- 1958 – உ. வாசுகி, தமிழக-இந்திய இடதுசாரி அரசியல்வாதி
- 1968 – சஞ்சய் சுப்ரமண்யன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
- 1968 – சுந்தர் சி., தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1980 – சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்
- 1984 – லுகே கிரிமேஸ், அமெரிக்க நடிகர்
- 1987 – ஆயிதா ஹாஜி அலீ, சுவீடன் அரசியல்வாதி
இறப்புகள்
- 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)
- 1892 – ஜான் கவுச் ஆடம்சு, பிரித்தானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1819)
- 1924 – விளாதிமிர் லெனின், உருசிய மார்க்சியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது தலைவர் (பி. 1870)
- 1926 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1843)
- 1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொறியியலாளர் (பி. 1886)
- 1950 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1903)
- 1981 – விஷ்ணுராம் மேதி, அசாம் முதலமைச்சர் (பி. 1888)
- 1989 – பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)
- 1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
- 1992 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (பி. 1936)
- 2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1907)
- 2013 – எம். எஸ். உதயமூர்த்தி, தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்
- 2016 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
- 2019 – சிவக்குமார சுவாமி, இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (பி. 1907)
சிறப்பு நாள்
- தேசிய முத்த நாள் (ஐக்கிய அமெரிக்கா)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ "Principal Ceylon Events, 1995". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
- ↑ Weaver, Courtney; Rennison, Joe; Whipp, Lindsay; Bullock, Nicole (January 22, 2017). "Trump reacts to mass protests with conciliatory tweet: More than 2.5m people gather around the world to take part in Women's March". Financial Times இம் மூலத்தில் இருந்து January 22, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170122050503/https://www.ft.com/content/7b34cd82-dfe2-11e6-8405-9e5580d6e5fb.