உள்ளடக்கத்துக்குச் செல்

கார்பனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்பனைட்டு (Carbonite) என்பது ஒரு வெடிபொருளாகும். தொடக்ககாலத்தில் மிகவும் வெற்றிகரமாக நிலக்கரி சுரங்கங்களை வெடிக்க வைக்க பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களில் கார்பனைட்டு வெடிபொருளும் ஒன்றாகும். [1] நைட்ரோகிளிசரின், நுண்மரத்தூள், சில நைட்ரேட்டு உப்புகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கார்பனைட்டு தயாரிக்கப்படுகிறது. நைட்ரோபென்சீன், சால்ட்பீட்டர், கந்தகம் போன்ற உப்புகளும் இத் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுவதுண்டு. சிகிமிட்டு மற்றும் பிச்செல் ஆகியோர் இவ்வெடிபொருளை கண்டுபிடித்தனர். [2]

கார்பனைட்டு என்ற சொல் பின் வரும் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

  • பொதுவாக சிகிமிட்டு மற்றும் பிச்செல் ஆகியோரிடமிருந்து கந்தகமேற்றப்பட்ட தார் எண்ணெய், நைட்ரோகுமீன் மற்றும் சோடியம் நைட்ரேட் ஆகியவற்றால் தொடக்கத்தில் செய்யப்பட்ட ஒரு வெடியாகும். [3]
  • குறிப்பிட்ட கார்பனைட்டு செய்முறையில் டைனமைட்டு தயாரிக்கப்பட்டு இந்த பெயரில் சிகிமிட் மற்றும் பிச்செல் ஆகியோரால் விற்கப்பட்டது, அல்லது
  • ஆர்க்டிக் கார்பனைட்டு அல்லது அமோன்கார்பனைட்டு ஆகியனவற்றின் அசல் செயல்முறையின் விளைபொருளில் எரியும் பொருள்களின் சதவீதம் அதிகமாக இருக்கும் வினையிலுள்ள பெரும்பாலான கார்பன், கார்பனோராக்சைடுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எரிதல் வெப்பநிலையும் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. சில கார்பனைட்டுகள் பாதுகாப்பான டைனமைட்டுகளாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dictionary of Explosives, Arthur Marshall, p. 18
  2. A Dictionary of Applied Chemistry, Thomas Edward Thorpe, p. 468
  3. The Manufacture of Explosives, Oscar Guttman, p. 231
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைட்டு&oldid=3075373" இலிருந்து மீள்விக்கப்பட்டது