உள்ளடக்கத்துக்குச் செல்

காரீய பிக்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரீய பிக்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
lead(2+);2,4,6-trinitrophenolate
வேறு பெயர்கள்
காரீய இருபிக்ரேட்டு
இனங்காட்டிகள்
25721-38-4
InChI
  • InChI=1S/2C6H3N3O7.Pb/c2*10-6-4(8(13)14)1-3(7(11)12)2-5(6)9(15)16;/h2*1-2,10H;/q;;+2/p-2
    Key: MHVVRZIRWITSIP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3045289
  • C1=C(C=C(C(=C1[N+](=O)[O-])[O-])[N+](=O)[O-])[N+](=O)[O-].C1=C(C=C(C(=C1[N+](=O)[O-])[O-])[N+](=O)[O-])[N+](=O)[O-].[Pb+2]
பண்புகள்
C12H4N6O14Pb
வாய்ப்பாட்டு எடை 663.39 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காரீய பிக்ரேட்டு (lead picrate), Pb(C6H2(NO2)3O)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய, பிக்ரேட்டு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கரிம வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பிக்ரிக் அமிலத்தின் உப்பாகும். இச்சேர்மத்தில் காரீயமானது +2 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. இச்சேர்மம் ஒரு அதிக உணர்திறன் மிக்க வெடிக்கும் பொருளாகும். இது ஒரு வெடிக்க வைக்கும் தொடக்க வினைப்பொருள் ஆகும்.[1]

செயல்முறை விளக்க நோக்கங்களுக்காக, இயல்பான சூழலில், மிகவும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படலாம். பிக்ரிக் அமிலமானது சிவப்பு காரீயத்துடன் (Pb3O4) கலக்கப்பட்டு பின்னர் வெப்பப்படுத்தப்படுகிறது. ஒரு நேரத்தில் 50 மில்லி கிராமுக்கும் அதிகமாக இதனைத் தயாரிப்பது கூடாதென பரிந்துரைக்கப்படுகிறது. 130–160 °செ வெப்பநிலையைச் சுற்றி, பிக்ரிக் அமிலமானது உருகத் தொடங்குகிறது. இவ்வாறு பிக்ரிக் அமிலம் உருகத் தொடங்கும் போது, கலவையானது வெடிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jai Prakash Agrawal (2015). High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics. John Wiley & Sons.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரீய_பிக்ரேட்டு&oldid=2749188" இலிருந்து மீள்விக்கப்பட்டது