உள்ளடக்கத்துக்குச் செல்

உள்நோக்கியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகநோக்கியியல்
Endoscopy
அகநோக்கியியல் செயல்முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு
MeSHD004724
OPS-301 code1-40...1-49, 1-61...1-69
மெட்லைன்பிளஸ்003338
நெகிழ்வான (வளையக்கூடிய) அகநோக்கியின் படம்.
அகநோக்கியைப் பயன்படுத்தும் ஒரு மருத்துவர்.

அகநோக்கியியல் (endoscopy) அல்லது உள்நோக்கியியல் என்பது மருத்துவ நோக்கில் உடலின் உட்பகுதியைப் பார்க்கப் பயன்படும் நுட்பமும் (அகநிலை அறுவை அல்லது அகநிலைச் செயல்முறை பற்றிய) செயல்பாட்டுப்புலமும் ஆகும்.[1] இந்த உடல்சார் அகநோக்கலும் செயல்முறையும் ஓர் அகநோக்கி வழியாக உடலின் போலான உறுப்பை அல்லது பகுதியை நோக்கவோ அல்லது அகநிலை அறுவைக்கோ அல்லது இடையீட்டுச் செயல்முறைக்கோ பயன்படுத்துகிறது. பிற பல மருத்துவப் படிமவரை நுட்பங்களைப் போல் வெளியில் இருந்துக் கதிர்வீச்சு அல்லது மீயொலி கொண்ட உடற்கூறு சார்ந்தபடிமங்களைப் பதிவு செய்யாமல், அகநோக்கிகள் உடலின் உள்ளே நேரடியாகச் செருகப்பட்டுக் குறிப்பிட்ட மருத்துவத் துறை வல்லுனரால் ஆய்வும் மருத்துவ இடையீடும் (அறுவையோ அல்லது சிறும அளவு பதக்கூறு எடுத்தலோ போன்ற இடையீடு) குறிப்பிட்ட உடலுறுப்பில் செய்யப்படுகிறது.

அகநோக்கிகளில் பல வகைகள் உள்ளன. உடலின் உறுப்பைச் சார்ந்தும் மேற்கொள்ளப்படும் இடையீட்டுச் செயல்முறை அல்லது அறுவையைச் சார்ந்தும், அகநோக்கிச் செயல்முறை குறிப்பிட்ட துறை வல்லுனராலோ அல்லது அறுவை வல்லுனராலோ மேற்கொள்ளப்படும். இந்த இடையீட்டுச் செயல்முறை நோயாளியின் நனவுநிலையிலோ மயக்கமூட்டப்பட்ட நிலையிலோ மேற்கொள்ளப்படலாம். பெரும்பாலும், அகநோக்கியல் செயல்முறை எனும் இச்சொல் மாந்த இரைப்பைக் குடல் மேற்பகுதியில் உள்ள உணவுக்குழல், இரைப்பை முன்சிறுகுடல் ஆகிய அக இடையீட்டு மருத்துவச் செயல்முறையையே குறிக்கிறது.[2]

உடலின் உட்பகுதிகளைக் காண அகநோக்கிகளைப் பயன்படுத்துவதைப் போலவே வானூர்தி உந்துபொறி, நீராவிச் சுழலி, தானுந்து உள்கனற் பொறி போன்றவற்றின் நேரடியாக பார்க்கவியலாத உட்பகுதிகளைப் பார்க்கப் பயன்படுத்தும் கருவிக்குப் புரையுள்நோக்கி (borescope) அல்லது துளையகநோக்கி என்று பெயர்.

வரலாறு

[தொகு]

வாய்விரிப்புக் கருவியேதும் இல்லாமல் வாளை விழுங்குபவர்களைக் கண்டு ஊக்கமுற்ற அடோல்ப் குசுமவுள் முதலில் ஓர் ஒளிப்படக் கருவியையும் பின்னர் ஒரு மின்விளக்கையும் வாய்வழியே உள் அனுப்பும் வழிமுறையை உருவாக்கினார். அதற்கு முன்பு வெளியே உள்ள மெழுகு விளக்கும் எண்ணெய் விளக்கும் உறுப்புக்கு உள்ளே ஒளியூட்டப் பயன்படுத்தப்பட்டன.[3]

அந்தோனின் தேசீமவுக்சு கண்டறிந்த சிறுநீரகநோக்கியை, முதன்முதலில் 1855 பிப்ரவரி 7 இல் ஒளியியல் பொறிஞரான சார்லசு செவாலியே, அகநோக்கி எனப் பெயரிட்டு அழைத்தார். பிறகு இப்பெயரையே அந்தோனின் தேசிமவுக்சும் பின்பற்றிப் பயன்படுத்தலானார்.[4] குரல்வளை மருத்துவரான மசிந்தயர் 1894/5 இல் இசுகாட்லாந்தில் உள்ள, முதன்முதலில் மின்வழங்லைப் பெற்ற, கிளாசுக்கோ அரசு மருத்துவமனையில் ஒரு தன்னொளியூட்ட அகநோக்கியை உருவாக்கினார்.[5][not in citation given]

தொடக்கநிலைக் காலம்

[தொகு]

முதன் முதலில் உள்நோக்கி போன்ற அமைப்பை 1806 இல் பிலிப் போசினி என்பவர் ஒளியூட்டி எனப்பொருள்படும் அவரது "லிஃக்ட்லைட்டர்" என்னும் கருவியை அறிமுகப்படுத்தினார். இது "மனித உடலில் உள்ள குழல்களையும் நுண்துளைகளையும் நோக்கவும் ஆய்வுசெய்யவும் உருவாக்கப்பட்டது. எனினும், வியன்னா மருத்துவக் கழகம் இது போன்ற முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மிச்சிகனில் உள்ள மேக்கினிக் தீவைச்[சான்று தேவை] சேர்ந்த படைத்துறை அறுவை மருத்துவரான வில்லியம் பியூமாண்ட் 1822 இல் மனித உடலினுள் பயன்படுத்த தக்க ஓர் அகநோக்கி ஒன்றை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். மின்விளக்கின் பயன்பாடு அகநோக்கியின் மேம்பாட்டிற்கு முதன்மையான வளர்ச்சிப் படிநிலையாக அமைந்தது. இவற்றைப் போன்ற விளக்குகள் முதலில் உடலுக்கு வெளியில் அமைந்தன. பின்னர், இவை உள்ளே பொருத்தக்கூடிய மிகச்சிறிய விளக்குகளாகச் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக 1908 இல் சார்லசு டேவிட் உருவாக்கிய கருப்பையுள்நோக்கியில் உட்பொருத்திய குறுவிளக்கு ஒன்று அமைந்ததுவார்ப்புரு:CS. கேன்சு கிறித்தியான் யாக்கோபேயசு முதன்முதலில் அடிவயிற்று அகநோக்கியையும் (1912), நெஞ்சுக்கூட்டு அகநோக்கியையும் (1910)[சான்று தேவை] கண்டறிந்ததால், இவர் அடிவயிறு, நெஞ்சுக்கூடு பகுதிகளின் தொடக்கநிலை அகநோக்கியியலை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆகிறார். கெயின்சு கால்க் 1930 களில்[சான்று தேவை] அடிவயிற்று அகநோக்கியைக் கல்லீரல், பித்தப்பை நோய்களைக் கண்டறிய பயன்படுத்தினார். 1937 இல் இடம்மாறிய கருப்பையகத்தைக்[சான்று தேவை] கண்டறிவதற்கு அடிவயிற்றகநோக்கி பயன்படுத்தப்பட்டதாக நம்பகமான தகவல்கள் உள்ளன. 1944 இல், இராவுள் பால்மர் நோயாளிகளின் அடிவயிற்றின் வளிமநிலை பிரிதலுக்குப் பிறகு அவர்களைக் காலை மேலே தூக்கி மல்லாந்த படுக்கை நிலையில் (டிரென்டெலென்பர்கு நிலையில்) வைத்திருந்தார், மேலும், இது பெண் நோயியலார்கள் கருப்பையகநோக்கியை [சான்று தேவை] நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்தவும் வழிவகுத்தது.

கார்ல் இசுட்டார்சு

[தொகு]

கார்ல் இசுட்டார்சு (Karl Storz) 1945 இல் காது-மூக்கு-தொண்டை (காமூதொ, ENT) சிறப்பு வல்லுநர்களுக்கான துணைக்கருவிகளை உருவாக்கத் தொடங்கினார். அவரது நோக்கம் மருத்துவர்கள் மனித உடலின் உட்பகுதியில் பார்க்க இயலக்கூடிய துணைக்கருவிகளை உருவாக்குவதாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இந்த தொழில்நுட்பம் அவ்வளவு பெரிதாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை: மனித உட்பகுதியில் நோக்கவேண்டிய பகுதியின் கீழ் நுண்மின் விளக்குகளை முதலில் ஒளிரச்செய்தனர்; இதற்கு முன் வெளியே இருந்தே விளக்கின் ஒளியை உள்நோக்கிக் குழாய் ஊடே (தெறிக்கச் செய்து) உடலினுள் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கார்ல் இசுட்டார்சு பின்வரும் திட்டத்தைப் பின்பற்றினார்: அவர் முதலில் மிகவும் வெளிச்சமாக ஒளிரும் விளக்கை அறிமுகப்படுத்தியிருந்தார், ஆனால், இத்துணைக்கருவிகள் உடல் உறுப்பினுள் வெப்பம் அதிகம் தராத ஒளியைப் பயன்படுத்தியதால், சிறப்பாக உள்நோக்க உதவியதோடு, உள்ளே உள்ள நிலைமையை மாற்றாமல் தகவல் பெறவும் இடம் அளித்தது. அவரது பெயரில் 400 அளவுக்கும் மேற்பட்ட காப்புரிமைகளும் செயல்முறை வடிவமைப்புகளும் இருந்தன; இவை முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்வதில் முக்கிய பங்குவகித்தன, கார்ல் இசுட்டார்சு உள்நோக்கியின் உருவாக்கத்தில் மிகவும் முக்கியமான பங்குவகித்தவர் ஆவார். இது இவ்வாறு இருந்ததால், அவரது பொறியியல் திறன்களும் நெடுநோக்கும் ஒளியியல் வடிவமைப்பாளர் அரோல்டு ஆப்கின்சின் பணியுடன் இணைந்து, இறுதியாக மருத்துவ ஒளியியல் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

வயிற்றகநோக்கி உருவாக்கம்

[தொகு]

வயிற்றகநோக்கி முதன்முதலில் 1952 இல், மருத்துவர்களும் ஒளியியல் பொறியியலாளர்களும் இணைந்த யப்பானியக் குழுவினால் உருவாக்கப்பட்டது. [[ஒலிம்பசு தொழிலிணையத்துடன் கூட்டாக, முட்சூ சுகியுரா, டாக்டர். டாட்சுரோ உஜி மற்றும் அவரது உதவியாளர் ஷோஜி ஃபுகாமி ஆகியோருடன் பணிபுரிந்து, "கேஸ்ட்ரோ கேமரா" என்று அவர் முதலில் அழைத்த ஆய்கருவியை உருவாக்கினார். இது ஒளிரும் பல்புடன் கூடிய நெகிழ்வான முனையில் சின்னஞ்சிறிய கேமரா இணைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டதாக இருந்தது. அதனை அவர்கள் எக்ஸ்-ரேவில் கண்டறியமுடியாத வயிற்றுப் புண்களை புகைப்படமெடுத்தல் மற்றும் தொடக்க நிலையில் உள்ள வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிதல் போன்றவற்றிற்கு பயன்படுத்த சாத்தியமாயிற்று.

ஒளிநாரிழை அகநோக்கி

[தொகு]

அரோல்டு ஆப்கின்சு 1950 களின் முற்பகுதியில் ஒரு “நாரிழை அகநோக்கியை” (நெகிழ்வான கண்ணாடி நாரிழைகளின் ஒத்திசைவானத் தொகுப்பினால் உடல் உறுப்பின் படிமத்தைப் பதிவாக்கும் கருவி) வடிவமைத்தார், இது மருத்துவம், தொழில்துறை ஆகிய இரண்டு புலத்திலும் பயன்பட்டது. இந்த ஒளிநாரிழைகளின் தொடர்ந்த ஆராய்ச்சியும் மேம்பாடும் படிமத் தரத்தினை மேலும் மேம்பாடடைய வழிவகுத்தது. தொடர்ந்த கண்டுபிடிப்புகளால், ஆற்றல் மிக்க வெளிப்புற மூலத்தில் இருந்து இலக்குப் பகுதிக்கு ஒளிர்தலை ஏற்படுத்துவதற்கு கூடுதலான நாரிழைகள் பயன்படுத்தப்பட்டன, ஆகையால் அங்கு விளக்கமான பார்வையிடலுக்கும் வண்ண நிழற்படவியலுக்கும் தேவைப்படும் முழுமையான கதிர்நிரலில் ஒளியூட்டும் உயர் நிலையை அடையமுடிந்தது. (அகநோக்கி முனையின் மீது சிறிய மின்னிழை விளக்கு கொண்ட முந்தையச் செயல்முறை மங்கலான சிவப்பு விளக்கில் பார்க்க வேண்டியிருந்ததாலோ அல்லது அதிகரிக்கும் ஒளி வெளியீட்டினாலோ நோயாளியின் உட்பகுதி எரியும் அபாயம் இருந்ததாலோ கைவிடப்பட்டது.) ஒளியியல் பக்கத்தின் முன்னேற்றத்துடன் ஒன்றுசேர்ந்து, எண்டோஸ்கோபி செய்பவரின் கைகளில் இருக்கும் கட்டுப்பாடுகளால் முனையைக் கட்டுப்படுத்தும் திறன், உடம்பிற்குள்ளேயே இணைக்கப்பட்ட அகநோக்கி தானாகவே செயல்படும் முறையில் தொலைவில் இருந்தே அறுவை கருவிகளை இயக்க முடிந்த கண்டுபிடிப்புகள் போன்ற மேம்பாடுகள் ஏற்பட்டன. இது தற்போது நாம் அறிந்த சாவித்துளை அறுவையின் தொடக்கமாக அமைந்தது. போர்த்துகேயத்தைச் சேர்ந்த ஃபெர்னான்டோ ஆல்வெசு மார்ட்டின்சு, முதல் ஒளிநாரிழை அகநோக்கியைக் கண்டறிந்தார் (1963/64)

தண்டு வில்லை அகநோக்கிகள்

[தொகு]

எனினும், ஒளிநாரிழை அகநோக்கியில் எடுக்கும் படிமத் தரத்தில் இயற்பியல்சார்ந்த வரம்பெல்லைகள் இருந்தன. நவீன நிலையில், 50,000 நாரிழைகள் கொண்ட தொகுப்பே திறனான பிக்சல் உருவப்படத்தைக் கொடுக்கும். கூடுதலான தொடர்ந்த பயன்பாட்டு நெகிழ்வு நாரிழைகளை உடைக்கிறது, அதனால் கூடுதலான பிக்சல் இழப்புக்கள் ஏற்படுகிறது. இறுதியாக பெரும்பாலானவை முழு பிக்சல்களையும் இழந்துவிடும்கிறது. அது ஒட்டுமொத்த தொகுப்பை (மிகுதியான செலவில்) மாற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. ஒளிநாரிழையியலில் தொடர்ந்த மேம்பாட்டுக்கு மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதை ஆப்கின்சு உணர்ந்தார். முந்தைய திண்மநிலை அகநோக்கிகள் மிகவும் குறைவான ஒளியூட்டத் திறனாலும் மிகவும் தரங்குறைந்த உருவப்படத் தன்மையாலும் ஏற்பிழந்தன. அறுவைக் கருவிகளும் அதனுடன் அமைந்த ஒளியூட்டல் அமைப்பும் அறுவைத் தேவைகளும் உண்மையில் அகநோக்கியின் குழாயினுள் அமைந்துள்ளவை. இவை அவற்றுள் மனித உடல் பருமான வரம்புக்குட்பட்டவையாகவும் இருந்தன. ஒளிப்படவியலுக்கு மிகவும் சிறிய அறையே ஒதுக்கப்பட்டது. வழக்கமான அமைப்பின் சின்னச்சிறிய வில்லைகளுக்கு, வில்லைப் பகுதியின் திரண்ட மறைபகுதி வளையத்தின் ஆதரவு தேவையாக இருந்தது; அவற்றைச் செய்வதும் பொருத்துவதும் நம்பமுடியாத அளவிற்குக் கடினமாக இருந்தது, மேலும் அது ஒளியியலாக கிட்டத்தட்ட பயனற்றதாகவும் இருதது. கண்ணாடித் தடிகளுடன் 'சிறிய வில்லைகளுக்கு' இடையில் காற்று இடைவெளிகளை நிரப்பி அதற்குப் பொருத்தமானத் தீர்வை ஆப்கின்சு 1960 களின் பிற்பகுதியில் உருவாக்கினார். இது அகநோக்கிக் குழாயினுள் சரியாகப் பொருந்தியது. மேலும் அவை தாமாகவே வரிசைப்படுத்திக்கொண்டதோடு, மேலும் வேறு ஆதரவு எதுவும் தேவையற்ற தன்மை கொண்டதாகவும் இருந்தன. மேலும் இவை முற்றிலும் சிறிய வில்லைகளைப் பகிர ஏற்றனவாகவும் அமைந்தன. தண்டு வில்லைகள் கையாளுவதற்கு மிகவும் எளிதாக இருந்தன, மேலும் இதில் மிகவும் பேரளவு சாத்தியமுள்ள விட்டம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் தண்டு முனைகளுக்குப் பொருத்தமான வளைவும் மேல்பூச்சும் கண்ணாடி வகைகளின் உகந்த தேர்வுகளும் ஆப்கின்சால் கணக்கிட்டுக் குறிப்பிடப்பட்டன, அதில் உருவப்படத் தரம் குழாய்களின் விட்டம் 1மிமீ மட்டுமே இருந்தாலும் கூட நன்கு அமைந்தது. அது போன்ற சிறிய விட்டத்துடன் கூடிய உயர் தர 'தொலைநோக்கியுடன்', கருவிகளும் ஒளியூட்டல் அமைப்புகளும் வெளிப்புறக் குழாயினுள் நன்கு பொருந்தின. இருவர் முதன் முதலில் நீண்டதும் செயல்திறமிக்கதுமான கூட்டினைப் பயன்படுத்தி இந்தப் புதிய அகநோக்கிகளை உருவாக்கினர், கார்ல் சுட்டோர்சும் மீண்டும் ஒரு முறை அதில் இணைந்தார். உடலுக்குள் இருக்கும் சில மண்டலங்களுக்கு (முதன்மையாக இரையகக்குடல் தடவழி) நெகிழ்வான அகநோக்கிகள் எப்போதும் தேவை என்றபோதும், திண்மநிலை தண்டு வில்லை அகநோக்கிகள் சில விதிவிலக்கான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன, அவை இந்நாட்களில் தேர்ந்தெடுக்கப்படும் கருவிகளாக இருக்கின்றன, மேலும் நடைமுறையில் அவை நவீனச் சாவித்துளை அறுவையின் சாத்தியத்திற்கான காரணிகளாகவும் இருக்கின்றன. அரோல்டு ஆப்கின்சு அவரது மருத்துவ-ஒளியியல் முன்னேற்றத்தின் காரணமாக மருத்துவர்களால் உலகளவில் பாராட்டப்பட்டுப் பெரிதும் மதிக்கப்படுகிறார். 1984 இல் அவர் அரசு கழகத்தில் உரூம்ஃபோர்ட் பதக்கத்தினைப் பெற்ற போது, அது அவருடைய தகுதியை எடுத்துக்கூறும் முதன்மைச் சான்றாக அமைந்தது.)

தொற்று நீக்கம்: தகுந்த நேரத்திற்குள் ஒளிநாரிழை அகநோக்கிகளின் தொற்று நீக்கம் இன்றியமையாததாக இருக்கிறது. முதல் தொற்றுநீக்கச் சாதனம் 1976 இல் செருமனியில் உள்ள போன் பல்கலைக்கழகத்தில் எஸ்.ஈ. மைடெரரால் உருவாக்கப்பட்டது.

நோக்கீட்டு/இடையீட்டுச்செயல் அகநோக்கி

[தொகு]

குறைவாகத் துளையிடும் நோயியல்புள்ள மருத்துவ நடைமுறைக்கு அகநோக்கியை உடலினுள் குழாய்வழிச் செருகி, ஓர் உறுப்பின் உட்புற மேற்பரப்புகளை மேலோட்டமாக மதிப்பிடுவதற்கு பயன்படுத்தலாம். இந்தத் துணைக்கருவி திண்மையான அல்லது நெகிழ்வான குழாயைக் கொண்டிருக்கலாம், மேலும் இது காட்சியையும் ஒளிப்படவியல் படிமத்தையும் வழங்குவதில்லை; ஆனால் உயிரிழைய ஓர்வுகள் செய்யவும் அயற்பொருட்களை எடுத்தலுக்கும் உதவுகின்றனறகநோக்கியியல் குறைவாகத் துளையிடும் அறுவைக்கான ஊடுபொருளாக இருக்கிறது, மேலும் நோயாளிகள் உணர்வற்ற நிலையில் இருப்பதால் அவர்கள் வலியையும் கடும் நெருடலையும் உணராமல் இருப்பார்கள். பல அகநோக்கியியல் செயல்முறைகளை ஒப்பிடுகையில் வலியற்றவையாகவும் கடும் நிலையில் இடைப்பட்ட ஏந்தே உடையவையாகவும் கருதப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, உணவுக்குழாய் அகநோக்கியியலில், பெரும்பாலான நோயாளிகள் தொண்டைப்பகுதியின் குறிப்பிட்ட இடம் சார்ந்த உணர்வகற்றல் செயல்முறையைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.[6] சிக்கல்கள் அரிதாகவே இருக்கின்றன, ஆனால் அகநோக்கி அல்லது உயிரிழைய எடுப்புத் துணைக்கருவியுடன் சோதனையிடுவதற்காக உடலில் துளையிட வேண்டியிருக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் காயத்தைக் குணப்படுத்துவதற்கு திறந்த அறுவைமுறை கூட தேவைப்படலாம்.

அகநோக்கி உறுப்புகள்

[தொகு]

ஓர் அகநோக்கி பின்வரும் உறுப்புகளை உள்ளடக்கி இருக்கும்:

  • ஒரு திண்மையான அல்லது நெகிழ்வான குழாய்
  • உறுப்பு அல்லது பொருளை ஆய்வு செய்வதற்கான ஓர் ஒளியூட்டல் அமைப்பு. இந்த ஒளி வாயில் பொதுவாக உடலின் வெளிப்புறத்தில் அமைந்த ஒளிநாரிழை வட வழியாக இயக்கப்படுகிறது
  • நாரிழை அகநோக்கியால் படிமத்தை உருவாக்கும் ஒரு வில்லை அமைப்பு
  • மருத்துவத் துணைக்கருவிகள் அல்லது அறுவைக் கருவிகளை நுழைப்பதற்கு வழிவிடும் ஒரு கூடுதல் துளை

மருத்துவப் பயன்கள்

[தொகு]
அகநோக்கி அறுவைப்பகுதி
அகநோக்கிச் செருகுமுனை

அகநோக்கி செரிப்பு மண்டல அறிகுறிகளை ஆய உதவுகிறது. இவற்றுள் குமட்டல், வாந்தி, அடிவயிற்று வலி, விழுங்கற் சிக்கல், சிறுகுடல் குருதிக்கசிவு ஆகியன அடங்கும்.[7] இவை சோகை, குருதிக்கசிவு, அழற்சி, செரிப்பு மண்டலப் புற்று போன்ற நோய்நிலைமைகளின்போது திசுப்பதம் எடுத்து நோயறிய பய்ன்படுகின்றன .[7] இந்த இடையீட்டுச் செயல்முறை குருதிக்கசிவு குழலின் மின்தீய்ப்புக்கும் உண்வுக்குழலைப் புகுத்திவழி விரிவாக்கவும் அயற்பொருள் நீக்கவும் கழலைக்கட்டி வெட்டி நீக்கவும் பயன்படுகிறது.[7] செரிப்புச் சிக்கல்களில் சிறப்புப் புலமைபெறும் தொழில்முறை நிறுவனங்கள் பாரெட் உணவுக்குழல் சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு அகநோக்கியியல் இடையீட்டுச் செயல்முறைக்குப் பரிந்துரைக்கின்றனர்.[8] இந்தக் கழகங்கள், பாரெட் உணவுக்குழல் நிலைமை உள்ள நோயாளிகளுக்கு இருமுறை இழைய ஆய்வுக்குப் பிறகும் புற்றுசார் அறிகுறிகள் காணப்படாவிட்டால் பரிந்துரைத்த வீதத்தை விட அடிக்கடி இழைய ஆய்வுக்குப் பரிந்துரைக்கின்றன.[9][10]

உறுப்புகளும் புலங்களும்

[தொகு]
தோராய நீளமுள்ள மலவாய்நோக்கி, மலக்குடல்தடநோக்கி, மலக்குடல்நோக்கி
அகநோக்கியியல் அறுவை

நலவாழ்வு ஏற்பாட்டாளர்கள் கீழ்வரும் உடற்பகுதிகளை நோக்க அகநோக்கியைப் பயன்படுத்தலாம்:

  • மாந்த இரைப்பைக் குடல் தடவழி (GI தடவழி):
    • உணவுக்குழல் புகுத்தி விரிவாக்கி, வயிறு, முன்சிறுகுடல் (உணவுக்குழல், வயிறு, முன்சிறுகுடல்நோக்கி) ** சிறுகுடல் (சிறுகுடல்நோக்கி) ** பெருங்குடல் (பெருங்குடல்நோக்கி, முன்பெருங்குடல்நோக்கி) ** உருப்பெருக்க அகநோக்கியியல் ** பித்தநீர்க்குழல் *** அகநோக்கி பின்னேகும் பித்தநீர்க்குழல் கணையநோக்கியியல் (ERCP), முன்சிறுகுடல்நோக்கி உதவியால் பித்தநீர்க்குழல் கணையநோக்கியியல், உட்செயல்பாட்டுப் பித்தநீர்க்குழல்நோக்கியியல் ** மலக்குடல் (மலக்குடல்நோக்கி) மலவாய் (மலவாய்நோக்கி) இரண்டும் (மலக்குடல்தடவழிநோக்கி) எனப்படும். * மூச்சுக்குழல் தடவழி ** மூக்கு (மூக்ககநோக்கி) ** மேற்பகுதி மூச்சுக்குழல் தடவழி (குரல்வளைநோக்கி) ** கீழ் மூச்சுக்குழல் தடவழி (மூச்சுக்குழல்நோக்கி) * செவி (செவிநோக்கி) * சிறுநீர்க்குழல் தடவழி (சிறுநீக்குழல்நோக்கி) * பெண்ணினப்பெருக்க மண்டலம்
      (மகப்பேற்றுநோக்கி)
    • கருப்பைவாய் (கருப்பைவாய்நோக்கி)
    • கருப்பை (கருப்பைநோக்கி)
    • பலோப்பியக்குழல்கள் (பலோப்பியக்குழல்நோக்கி)
  • இயல்பாக மூடியுள்ள உடற்குழிகள் (சிறுவெட்டுவழி):
    • அடிவயிறு அல்லது இடுப்பெலும்புக்குழி (இடுப்பென்புக்குழிநோக்கி)
    • மூட்டகப் பகுதி (மூட்டகநோக்கி)
    • மார்பக உறுப்புகள் (மார்பகணிநோக்கி (நுரையீரல் நடுவிதழ்நோக்கி)

அகநோக்கியியல் பல இடையீட்டுச் செயல்முறைகளுக்கு உதவுகிறது:

  • கருவுறுதலின்போது
    • பனிக்குடம் (பனிக்குடநோக்கி)
    • கருக்குழவி (கருக்குழவிநோக்கி)
  • தசையறுவை
  • பேரகநோக்கியியல்(அல்லது மும்மை அகநோக்கி)
    • இது குரல்வளைநோக்கி, உணவுக்குழல் நோக்கி, மூச்சுக்குழல் நோக்கி ஆகிய மூன்றும் இணைந்தது.
  • முடநீக்க அறுவை
    • கை அறுவை, அகநோக்கிவழி மணிக்கட்டுப் புழை விடுவிப்புபோன்றன
    • கணுக்கால் அறுவை, முன் சிலுவை இழையநாண் மீளாக்கம் போன்றன
    • முதுகுநாண் இடைவெளி (முதுகுநாண் இடைவெளி நோக்கி)
    • சில்லிழைமப்பை (சில்லிழைமப்பை நீக்கல்)
  • பல்வேர் இழைய அறுவை
    • தாடையெலும்புக்குழி அறுவை
    • பல்லுச்சி வெட்டல்
  • அகநோக்கியால் மூக்கக அறுவை
  • அகநோக்கியியல் முதுகுநாண் அறுவை

பிற புலப் பயன்பாடுகள்

[தொகு]
  • சிக்கலான தொழிநுட்ப அமைப்புகளின் உட்பகுதிகளை நோக்குதல் போன்ற மருத்துவஞ்சாரா பயன்களுக்குத் புரையுள்நோக்கிகள் பயன்படுகின்றன. இவை அகநோக்கிகளை ஒத்தவையே.
  • திட்ட, கவின்கலை வல்லுனருக்கு கவின்கலை அகநோக்கி முன்மொழிந்த காட்டிடங்களையும் நகரங்களையும் சார்ந்த படிமங்களை முன்கூட்டியே நோக்குதலுக்கு உதவுகிறது.
  • வெடிநீக்கப் பணியாளருக்கு புதிய வெடிப்புக் கருவிகளை ஆவதற்கு அகநோக்கிகள் உதவுகின்றன.
  • சட்டச் செயலாக்கம் இறுக்கமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ள அகநோக்கிகளைப் பயன்படுத்துகிறது.

இடர்கள்

[தொகு]

முதன்மை இடர்களாக, தொற்று, மிகைமயக்கமூட்டல், துளையிடல், வயிற்றுக் கிழிப்பு அல்லது உணவுக்குழல் புறணிப் பதமெடுப்பு, குருதிவடிதல் ஆகியன அமைகின்றன.[11] பெரும்பாலும் துளையிட,அறுவை பொதுவாகத் தேவையாகும் என்றாலும் நுண்ணுயிர்க்கொல்லி வழியாகவும் சிரையூடான பாய்மம் செலுத்தியும் சரிசெய்யலாம். இழையப்பதம் எடுக்கும் அல்லது கழலைக்கட்டிகள் நீக்கும் இடத்தில் குருதி வடியலாம். இப்படிப்பட்ட குருதிக் கசிவுகள் தானே நின்றுவிடும் அல்லது இவற்றை மின்தீய்த்தல்வழியாகக் கட்டுப்படுத்தலாம். பெரிதும் இதற்கு அறுவை ஏதும் தேவைப்படாது. வயிற்றகநோக்கி இடையீட்டில் அரிதாகவே துளையிட்டுக் குருதி கசியும் வாய்ப்பு அமையும். பிற சிற்றளவான இடர்களில் நோயாளியின் பிற நோய்கள் சார்ந்த மருந்து எதிர்வினைகளும் சிக்கல்களும் உள்ளடங்கும். எனவே, நோயாளிகள் தம் ஒவ்வாமைப் போக்குகளையும் மருத்தவச் சிக்கல்கலாஇயும் மருத்துவரிடம் அறிவித்தல் வேண்டும். சிலவேளைகளில், மயக்க மருந்தூட்டிய இடங்களில் அழற்சி கொஞ்சநேரம் நீடிக்கலாம். இது அவ்வளவு கடுமையாக அமையாது; இதற்கு வெம்பத ஒத்தடம் சிலநாள்வரை தரவேண்டும்மிவ்வகைச் சிக்கல்கள் ஏற்பட்டாலும், அடிக்கடி ஏர்படாது. வயிற்றகநோக்கி இடையீடு தொர்பான பிற இடர்கலை மருத்துவரே நோயாளியிடம் விவாதிப்பார்.

அகநோக்கியலுக்குப் பிறகு

[தொகு]

அகநோக்கியல் செயல்முறைக்குப் பிறகு, அகநோக்கக அறையிலோ அல்லது நோய்மீட்பு அறையிலோ நோயாளி தகுதியான செவிலியரால் கணிசமான மருத்துவ இடையீட்டுப் பகுதி ஆறும்வரை கண்காணிக்கப்படுவார். சிலவேளைகளில், நோயாளிக்கு மென்மையான தொண்டைக் கரகர்ப்போ எரிச்சலோ ஏற்படலாம். இதை உப்புநீர்க் கொப்பளித்தோ அல்லது காமோமைல் தேநிர் அருந்தியோ தீர்க்கலாம்; இது சில வாரங்கல் வரை நீடிக்கலாம் அல்லது வராமலே போகலாம். இடையீட்டின்போது ஊதியக் காற்றால் வீங்கியது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த இருசிக்கல்களுமே மிக மெஇதாகவும் உடனே நீங்குவதாகவுமே அமையும். முழுமையாக மிட்புற்றதும், நோயாளி வழக்கம்மன உண்வை உட்கொள்ளவும் சில மணிகளுக்குப் பின்னர் வீட்டுக்குச் செல்லவுமறுவுறுத்தப்படுவார். மயக்க மருந்து ஊட்ட்டப்பட்டிருந்தால், நோயாளியோடு ஒருவர் உடன்செல்லுமாறும் அந்த நாள் முழுவதும் ஊர்தியோட்டவோ வேறு எந்திரமேதும் இயக்கவோ கூடாதெனவும் அறிவுறுத்தப்படுவார். மயக்க மருந்து ஊட்டப்படாதவருக்கு உதவிக்கு யாரும் இல்லாமலே வீட்டுக்குச் செல்லலாம்.

அண்மைய மேம்பாடுகள்

[தொகு]

காணொலி அகநோக்கி.

எந்திரனியல் அமைப்புகளின் பயன்பாட்டினால் தொலைஅறுவைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் அறுவை மருத்துவர் நோயாளியிடமிருந்து நோயுற்ற பகுதியை உடலில் இருந்து நீக்கிவிட்டு அறுவையைச் செய்யலாம் முதலில் அட்லாண்டிக்கடந்து செய்யப்பட்ட அறுவை இலின்டுபெர்க் அறுவை என அழைக்கப்படுகிறது

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Endoscopy". British Medical Association Complete Family Health Encyclopedia. (1990). Dorling Kindersley Limited. 
  2. "Endoscopy". Cancer Research UK. Archived from the original on 1 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "The pioneers of endoscopy and the sword swallowers".
  4. Janssen, Diederik F (2021-05-17). "Who named and built the Désormeaux endoscope? The case of unacknowledged opticians Charles and Arthur Chevalier" (in en). Journal of Medical Biography 29 (3): 176–179. doi:10.1177/09677720211018975. பன்னாட்டுத் தர தொடர் எண்:0967-7720. பப்மெட்:33998906. https://journals.sagepub.com/doi/10.1177/09677720211018975. 
  5. "The Scottish Society of the History of Medicine" (PDF).
  6. National Digestive Diseases Information Clearinghouse (2004). "Upper Endoscopy". National Institutes of Health. Archived from the original on 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  7. 7.0 7.1 7.2 Staff (2012). "Upper endoscopy". Mayo Clinic. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
  8. American Gastroenterological Association, "Five Things Physicians and Patients Should Question" (PDF), Choosing Wisely: an initiative of the ABIM Foundation, American Gastroenterological Association, archived from the original (PDF) on August 9, 2012, பார்க்கப்பட்ட நாள் August 17, 2012
  9. "American Gastroenterological Association medical position statement on the management of Barrett's esophagus". Gastroenterology 140 (3): 1084–91. March 2011. doi:10.1053/j.gastro.2011.01.030. பப்மெட்:21376940. https://archive.org/details/sim_gastroenterology_2011-03_140_3/page/1084. 
  10. "Updated guidelines 2008 for the diagnosis, surveillance and therapy of Barrett's esophagus". The American Journal of Gastroenterology 103 (3): 788–97. March 2008. doi:10.1111/j.1572-0241.2008.01835.x. பப்மெட்:18341497. 
  11. "Endoscopy". NHS Choices. NHS Gov.UK. பார்க்கப்பட்ட நாள் April 20, 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்நோக்கியியல்&oldid=3706144" இலிருந்து மீள்விக்கப்பட்டது