உணர்வு நிலை
உணர்வு நிலை (consciousness) அல்லது நனவு என்பது, மிகச்சுறுக்கமாகக் கூறின், ஒரு உயிர் தன் உட்புற வெளிப்புற இருத்தலை அறிந்த உணர்திறன் ஆகும்.[1] அதாவது தனது இருத்தல் நிலையையும் சூழலேடு அது கொண்ட தொடர்பையும் குறித்த விழிப்புணர்வை தனக்குள்ளேயே அறிந்திருப்பது ஆகும்.[2] இது உணரும் தன்மை, உள்ளுணர்வு, அனுபவிக்கும் அல்லது உணரும் திறன், சுயநினைவு அல்லது ஆன்மாவின் உணர்வு, மற்றும் மனதின் நிர்வாகக் கட்டுப்பாட்டு அமைப்பு என பல்வேறு வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.[3]
உணர்வு நிலையின் வகைகள்
[தொகு]உணர்வு நிலை கீழ்கண்ட வகைப்படுகின்றது:
- அனுபவ உணர்வு நிலை
- நடைமுறை உணர்வு நிலை
- பிரதிபலிப்பு உணர்வு நிலை
- பிரதிபலிப்பு வினை உணர்வு நிலை
உணர்வு நிலையின் வகைகள்
[தொகு]இரண்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றப்பட்ட நிலைகள் தூக்கம் மற்றும் கனவு ஆகும். கனவு தூக்கம் மற்றும் கனவு அல்லாத தூக்கம் ஒரு வெளிப்புற பார்வையாளருக்கு மிகவும் ஒத்தவை போலத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் மூளையின் செயல்பாடு, வளர்சிதை மாற்றச் செயல்பாடு, மற்றும் கண் இயக்கம் ஆகிய தனித்துவமான வடிவங்களுடன் தொடர்புடையது; ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான அனுபவம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. சாதாரண கனவு அல்லாத தூக்கத்தின் போது விழிப்போர் தெளிவற்ற மற்றும் குறிப்புகளை மட்டுமே கூறுகின்றனர். அவர்களின் அனுபவங்கள் ஒரு தொடர்ச்சியாக இணைந்திருக்கவில்லை. மாறாகக் கனவு தூக்கத்தின் போது, விழிப்போர் விரிவான அனுபவங்களைக் கூறுகின்றனர். எனினும் இவையும் விநோதமான அல்லது நம்ப முடியாத ஊடுருவல்களால் குறுக்கீடு செய்யப்படலாம்.[4]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "consciousness". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் June 4, 2012.
- ↑ Robert van Gulick (2004). "Consciousness". Stanford Encyclopedia of Philosophy.
- ↑ Farthing G (1992). The Psychology of Consciousness. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-728668-3.
- ↑ Anton Coenen (2010). "Subconscious Stimulus Recognition and Processing During Sleep". Psyche 16-2. https://journalpsyche.org/archive/volume-16-no-2-2010/.