இயற்கை நிழற்படக்கலை
இயற்கை நிழற்படக்கலை (Nature photography) என்பது பொதுவாக இயற்கைக் கூறுகளான தரை தோற்றம், வனஜீவராசிகள், தாவரங்கள் போன்றவைகளை எடுத்துக் காட்டும் முகமாக வெளி களங்களில் பிடிக்கப்படுபவையாகும். இவ்வாறான நிழற் படங்கள் மற்றைய நிழற் படங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வலுவான அழகியல் முக்கியத்துவத்தினை பிரத்தியேகமாக வழங்குகிறது. [1]
தோட்டங்களின் நிழற் படங்கள், தரைதோற்ற நிழற் படங்கள், வன வாழ்க்கை நிழற் படங்கள் என்பனவும் சில சந்தர்பங்களில் இயற்கை நிழற் படத்துறைகளில் மேலெழுகிறது.[1]
இயற்கை நிழற் படங்களானது விஞ்ஞான ,சுற்றுலா மற்றும் கலாசார சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படும். உதாரணமாக தேசிய புவியியல் சஞ்சிகை, தேசிய வனவாழ்க்கை சஞ்சிகை மற்றும் விஷேட சஞ்சிகைகளான வெளி கள புகைப்படபிடிப்பாளர், மிக சிறந்த இயற்கை நிழற் படங்கள் சஞ்சிகை என்பவற்றை குறிப்பிடலாம்.
வனவாழ்க்கை நிழற் படக்கலை
[தொகு]வனஜீவராசிகளின் நிழற் படங்களானது அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பிடிக்கப்படுகிறது . வன விலங்குகள் உணவு உண்ணும் போது, பறக்கும் போது, சண்டையிடும் போது பொதுவாக நிழற் படங்கள் பிடிக்கப்படுகின்றன . மாறாக வன விலங்குகளின் விபரங்களை அல்லது அவற்றின் இயற்கை சுழலை சித்தரிப்பதற்காக அவை நிலையான தோற்றங்களில் பிடிக்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய புகைப்பட நிறுவனங்களான அமெரிக்க நிழற் பட சமூகம், சர்வதேச சித்தரிப்பு நிழற்பட அமைப்பு , ரோயல் நிழற் பட சமூகம் என்பன இயற்கை மற்றும் வன வாழ்க்கை நிழற் படங்கள் தொடர்பாக நிழற் பட போட்டிகளில் பிரயோகிக்கப்படக்கூடிய வரைவிலக்கணம் ஒன்றை வரையறுத்து வெளியிட்டுள்ளன.[2] வன வாழ்க்கை புகைப்படத்தில் பயன்படுத்தப்படும். தொழில்நுட்பம் தரைத்தோற்ற புகைப்படங்களில் பயன்படுத்தப்படுபவைகளிலிருந்து பெருமளவிற்கு வேறுபடுகின்றன. வன வாழ்க்கை புகைப்படங்களில் வேகமான மூடுவேகத்தினை பெற்றுக்கொள்வதற்காக மிக அகலமான துவாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை படம் பிடிக்கப்படும் விடயத்தின் இயக்கத்தை நிலை நிறுத்தி பின்னணியை மங்கச் செய்யும் உத்தியாகும். அதே வேளை தரைத்தோற்ற புகைப்படக் கலைஞர்கள் சிறிய துவாரங்களை தெரிவு செய்கின்றனர். வன வாழ்க்கை புகைப்படங்கள் வழமையாக நீண்ட துவாரத்திலிருந்து நீண்ட தொலை நோக்கி வில்லைகளை பயன்படுத்தி பிடிக்கப்படுகின்றன. இவ்வகை தூரநோக்கு வில்லைகள் பெரும்பாலும் முக்காலியை பயன்படுத்தும் அவசியத்தை உருவாக்குகின்றன. முக்காலியானது நீண்ட வில்லைகள் வைத்திருப்பதற்கு கடினமானவை, கையடக்கமானவையல்ல.[3]
பேரின மற்றும் அமைப்புகள்
[தொகு]பேரின அமைப்பு முறையிலான நிழற்படங்கள் பொதுவாக அண்மித்த நிலையிலான நிழற்படங்களை பிரதிபலிக்கின்றன.எது எப்படியிருந்த போதிலும் இதுவும் ஒருவகையான இயற்கையின் நிழற்படத் தோற்றங்களாகும். பொதுவாக பேரின துறைகளில் தேனீக்கள் , தும்பிகள் மற்றும் பல வகை உயிரினங்கள் வன வாழ்கையில் விபரிக்கப்படும்.
பல நிழற் பட கலைஞர்கள் கல், மரப்பட்டை, இலை போன்றவற்றின் தோற்றங்களையும் மற்றும் சிறிய காட்சி அமைப்புகளையும் நிழற் படங்களாக பதிவு செய்து கொள்வார்கள். அண்மித்த நிலையில் எடுக்கப்படும் இயற்கையின் நிழற்படத் தோற்றங்களுக்கு உண்மையான பேரின வில்லைகள் எப்போதும் தேவைப்படுவதில்லை.எப்பிடி ஆயினும் இங்கே சிறிய காட்சிகள் வழமையான நிலத்தோற்றத்தில் இருந்து வேறுபட்டதாக கருதப்படுகிறது.
நிறங்களின் பயன்பாடு
[தொகு]இயற்கையான நிழற் கலைக்கு வர்ண நிழற் படங்கள் அவசியமானவை அல்ல. அன்ஸல் அடம்ஸ் என்பவர் கறுப்பு, வெள்ளை காட்சி அமைப்புக்கு பிரசித்தி பெற்றவர், புஜிபில்ம், வேள்வியா திரைப்படமானது அதனுடைய பிரகாசம், முழுமையாகப்பட்ட வர்ணங்கள் போன்றவற்றிக்காக களேன் ரோவேல் என்பவரால் பாராட்டப்பட்டது.[4]
நெறிமுறைகள்
[தொகு]இயற்கை நிழற் பட உருவாக்கத்துடன் தொடர்புடைய பல நெறி முறைகள் மற்றும் விவாதங்கள் உள்ளன . பொதுவான பிரச்சனையாக வன ஜீவராசிகளை துன்புறுத்துதல், இயற்கையான பிரதேசங்களை அழித்தல் மற்றும் நிழற் பட கலைஞர்கள் வரம்பு மீறுதல் போன்றவை காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Purdue Univ., "Nature and Landscape Photography", from ''Visualizing Nature: Promoting Public Understanding and Appreciation of Nature, [Department of] Earth, Atmospheric, and Planetary Sciences, Purdue University, West Lafayette, Indiana, retrieved October 4, 2015.
- ↑ https://rps.org/news/2014/may/nature-definition-agreed பரணிடப்பட்டது 2017-07-25 at the வந்தவழி இயந்திரம் Accessed 25 May 2014
- ↑ "Blindsiding Wildlife with a Camera". National Wildlife (National Wildlife Federation). December 1, 2009. https://www.nwf.org/News-and-Magazines/National-Wildlife/PhotoZone/Archives/2009/Blindsiding-Wildlife-with-a-Camera.aspx.
- ↑ Galen Rowell's Vision, Galen Rowell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87156-357-6