அமெரிசியம் அறுபுளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமெரிசியம்(VI) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
90116-77-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AmF6 | |
வாய்ப்பாட்டு எடை | 356.99 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமெரிசியம் அறுபுளோரைடு (Americium hexafluoride) AmF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியம் உலோகமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இன்னும் கருதுகோள் நிலையிலேயே இச்சேர்மம் பற்றிய கருத்துகள் உள்ளன.[1][2] அமெரிசியம் டெட்ராபுளோரைடை புளோரினேற்றம் செய்து அமெரிசியம் அறுபுளோரைடு தயாரிக்கும் ஒரு தயாரிப்பு முறை 1990 ஆம் ஆண்டில் முயற்சிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.[3] 1986 ஆம் ஆண்டில் இதை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகை முடிவுகள் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளன.[4] எண்கோணச்சமச்சீர் நிலையிலிருந்து சிதைவு மூலம் உருக்குலைந்து இது உருவாகலாம் என வேதிக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.[4]
தயாரிப்பு
[தொகு]313-333 கெல்வின் வெப்பநிலையில் நீரற்ற HF இல் உள்ள அமெரிசியம் முப்புளோரைடும் KrF2 சேர்மமும் சேர்ந்து வினைபுரிந்தால் அமுக்கப்பட்ட மற்றும் வாயு நிலை AmF6 இரண்டும் தயாரிக்கப்படலாம் என்று முன்மொழியப்பட்டது.[5]
AmF3 + KrF2 → AmF6 + Kr[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ O'Donnell, T. A. (8 June 2017). The Chemistry of Fluorine: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 1093. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-4642-3. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ Malm, J. G.; Weinstock, B.; Weaver, E. E. (1958). "The Preparation and Properties of NpF6; a Comparison with PuF6". The Journal of Physical Chemistry 62 (12): 1506–1508. doi:10.1021/j150570a009.
- ↑ 4.0 4.1 Seppelt, Konrad (2015). "Molecular Hexafluorides". Chemical Reviews 115 (2): 1296–1306. doi:10.1021/cr5001783. பப்மெட்:25418862.
- ↑ Silva, R. J.; Bidoglio, G.; Robouch, P. B.; Puigdomenech, I.; Wanner, H.; Rand, M. H. (2 December 2012). Chemical Thermodynamics of Americium (in ஆங்கிலம்). Newnes. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59935-3. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ Прусаков, Владимир Николаевич (2013). Избранные научные труды (in ரஷியன்). Rosatom. p. 59. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.