Published:Updated:

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

Published:Updated:
ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!
ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

''ஒரு படத்துல, கவுண்டமணியும் சத்யராஜும் வாடகைக்கு வீடு தேடிப் போவாங்க. அப்போ கவுண்டமணி பேச்சு கொடுக்கும்போது 'கிழவி பேசாதுங்க’னு ஒருத்தர் சொல்வார். 'அப்போ பாடுமா?’னு கவுண்டமணி நக்கலாக் கேட்பார். அதுக்குப் பேர்தான் பிளாக் ஹியூமர். அந்த மாதிரி டார்க் ஹியூமர் காமெடிதான் எங்க 'சுட்டகதை’!'' - என்கிறார்  இயக்குநர் சுபு.

''சரி... கதையை எங்கே இருந்து சுட்டீங்க?''  

''ஹா ஹா.. இது டி.வி.டி-ல இருந்து சுட்ட கதை இல்லைங்க. ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொல்ற கதை. திருடுறதை 'அவன் நைஸா சுட்டுட்டான்’னு சொல்வாங்களே... அப்படி திருட்டு சம்பந்தமான ஒரு கதை!  

'கோரமலை’னு இதுவரை நீங்க கேள்விப்பட்டிருக்காத கற்பனை மலைக் கிராமம். அந்தக் கிராமத்துல ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் புதுசா வேலைக்குச் சேர்றாங்க. ஒரு கொலை வழக்குல ஹீரோயினுக்கு உதவப் போய் சிக்கல்ல மாட்டிக்கிறாங்க. ஒரு கொலை விசாரணையை த்ரில்லிங்கா பார்க்கும் அதே சமயத்தில் அது காமெடியாவும் இருந்தா எப்படி இருக்கும்? சுட்ட கதை மாதிரி இருக்கும்!''  

''கற்பனைக் கிராமம்னா, எப்படி இருக்கும்?''

''கராத்தே, குங்ஃபூ மாதிரி மத்தவங்களை எச்சில் துப்பியே காலி பண்ற எம்.எஸ்.பாஸ்கர்தான் மலைவாழ் மக்கள் தலைவர். தன்னையே நம்பி இருக்கும் மக்களுக்காக, துப்புனா உயிர் போற கலையைக் கத்துக்கிறார். கூட இருக்கும் ஜெயமணி, மத்தவங்களைக் கடிச்சுக் கடிச்சே அந்தக் கலையை வளர்க்கிறார். அவங்க மொழியில் 'கூல்’னா 'பத்திரமாப் போய்ட்டு வா’னு அர்த்தம். 'ஜிங்கா’னா 'இங்கே வா’னு அர்த்தம். இது மாதிரி சில புது அர்த்தம் தர்ற வார்த்தைகளையும் அறிமுகப்படுத்துறோம்!''

ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்!

''கொலை, கடத்தல்னு இப்போ எதிர்மறை  விஷயங்களை காமெடியா காட்டுறதுதான் ட்ரெண்டா?''

''ஒரு திருடனோ, கொலைகாரனோ வாழ்க்கையில் சிரிக்காம, குதூகலத்தைக் கொண்டாடாமலா இருப்பான்? அந்தப் பக்கத்தை நாங்க காட்டுறோம். அதுக்காக இதில் எதையும் நியாயப்படுத்தலை. எல்லாமே ஜாலியான பாத்திரங்கள்தான். பிறக்கும்போதே நர்ஸ்கிட்டே செயின் அடிக்கும் குழந்தைத் திருடன், பிக்பாக்கெட் அடிச்சவன்கிட்டயே பர்ஸை ஆட்டையைப் போட்டவன், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தில் அவர் கண்ணாடியைக் களவாண்டவன்... இப்படிப்பட்ட அக்மார்க் திருடன் பாலாஜி ஒருநாள் கான்ஸ்டபிள் ஆனா எப்படி இருக்கும்? ஹீரோ பாலாஜி... ராம்கி ரசிகன். வெங்கி... அருண்பாண்டியன் ரசிகன். ரெண்டு பேரும் இணைந்த கைகள் மாதிரி காமெடி சாகசம் பண்ணித் துப்பறிவாங்க.

கதாபாத்திரங்களின் ஆடைகள், பாடி லாங்வேஜ், கதாபாத்திரப் படைப்புனு படம் முழுக்கவே எல்லாத்துலயும் காமெடி கொட்டியிருக்கோம். வடிவேலு, சந்தானம் காமெடி மாதிரி ரைமிங், டைமிங் பன்ச் எதுவும்  இருக்காது. ஆனா, படம் முழுக்க சிரிச்சுட்டே இருப்பீங்க!'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் சுபு.

- க.நாகப்பன்