22 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால் - பிரபு கூட்டணி | அமைதி காப்பாரா கமல்? | யாத்ரா, மம்முட்டி படத்தில் சுகாசினி | 'ஜீரோ' கனவு நனவானது - ஷாரூக் கான் | த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் : ஐகோர்ட்டும் ரத்து செய்தது | அபுதாபியில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளில் பிரபாஸ் | 'AAA+++' நடிகர் தனுஷ் : ஷாரூக் கான் பாராட்டு | ஜூலை 13-ல் கடைக்குட்டி சிங்கம் ரிலீஸ்? | மணிரத்னம் கண்டிப்பானவர் : அதிதிராவ் | எமி வெளியிட்ட அடுத்த ஹாட் போட்டோ |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வைதேகியாக நடித்தவர் பிரமிளா ஜோஷி, தப்புத் தாளங்கள் படத்தில் சரிதாவின் கணவராக நடித்தவர் சுந்தர் இவர்களின் மகள் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். கன்னடத்தில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்தார். சிரஞ்சீவி சார்ஜா நடிகர் அர்ஜுனின் உறவினர்.
ஆரம்பத்தில் இவர்கள் காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்கவில்லை. இதனால் 3 வருடங்கள் வரை காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று காலை பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கன்னட மற்றும் மலையாள திரையுலக பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.