நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கேப்டன் மில்லர் படம்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகராக உள்ள தனுஷ் கடைசியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் 'சாணி காகிதம்' மற்றும் 'ராக்கி' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடத்தில் கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தை தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷை வைத்து 4வது முறையாக மிகப்பிரமாண்டமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..
விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்தாக சொல்லப்பட்டது. வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல் படக்குழுவினர் அவ்வப்போது கேப்டன் மில்லர் படம் பற்றி தகவல்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
கேப்டன் மில்லர் டீசர்
இப்படியான நிலையில் தனுஷின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் தனுஷ் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு படத்தின் டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் மிரட்டலாக இடம் பெற்றுள்ள காட்சிகளைப் பார்க்கும்போது இப்படம் தனுஷ் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.