நப்ரொக்சென்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(+)-(S)-2-(6-methoxynaphthalen-2-yl) propanoic acid | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | Aleve, Anaprox, Apronax, Naprelan, Naprosyn |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a681029 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | US Daily Med:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C(AU) C(US) |
சட்டத் தகுதிநிலை | Pharmacy Only (S2) (AU) OTC (CA) P (UK) OTC (அமெரிக்கா) ஆத்திரேலியாவில் வகைப்பாடு-2 (Schedule 2) -இல் மட்டும், 15 நாட்களுக்கு மிகாமல் வழங்குமளவு வைத்திருத்தல். இல்லாவிடில் வகைப்பாடு-4 (schedule 4) ("prescription-only").[1] |
வழிகள் | Oral. |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | 95% (oral) |
புரத இணைப்பு | 99% |
வளர்சிதைமாற்றம் | Hepatic (to 6-desmethylnaproxen) |
அரைவாழ்வுக்காலம் | 12–24 hours |
கழிவகற்றல் | Renal |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 22204-53-1 |
ATC குறியீடு | G02CC02 M01AE02, M02AA12 |
பப்கெம் | CID 156391 |
DrugBank | DB00788 |
ChemSpider | 137720 |
UNII | 57Y76R9ATQ |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00118 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL154 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C14 |
மூலக்கூற்று நிறை | 230.259 g/mol |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 152-154 °C (-93 °F) |
நப்ரொக்சென் (Naproxen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி , காய்ச்சல், மாதவிடாய் வலி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து ஆன்டெஸ்வெல் (Antesvel), ஆர்தொபன்(Arthopan), செனொபிட் ஜெல்(Xenobid Gel) போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[2] வேறு வணிகப் பெயர்கள்: அலேவே (Aleve), அனப்ராக்ஸ் (Anaprox), அன்டல்ஜின் (Antalgin), பிமினக்ஸ் அல்ட்ரா (Feminax Ultra), பிளனக்ஸ் (Flanax), இன்சா (Inza), நல்கேசின் (Nalgesin), நபோசின் (Naposin), நப்றேலன் (Naprelan), நப்ரோகேசிக் (Naprogesic), நப்ரோசின் (Naprosyn), (Narocin) நரோசின் , ப்ரோக்சேன் (Proxen) , சின்பிலெக்ஸ் (Synflex), சேநோபிட் (Xenobid) .
மருத்துவப் பயன்பாடு
[தொகு]பொதுவாக தேய்மான மூட்டழற்சி, முடக்குவாத மூட்டழற்சி, தசைநாண் அழற்சி, கீல்வாதம் போன்ற நோய்களுக்கு நப்ரொக்சென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர வலிமிக்க மாதப்போக்கு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்
[தொகு]இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் நெஞ்செரிவு, குடற்புண், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற இரையகக் குடலிய விளைவுகள் மற்றும் தலைச்சுற்று, தோல் நமைச்சல், மங்கலான பார்வை, வீக்கம், மூச்சு விடக் கடினம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, காதில் இரைச்சல் ஆகும். இவற்றைத்தவிர மாரடைப்பு, மூளைக் குருதியடைப்பு, ஒவ்வாமை போன்ற கடுமையான பக்க விளைவுகளும் நப்ரொக்சென் பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்
[தொகு]இம்மருந்து குருதி சம்பந்த நோய்கள், கல்லீரல், சிறுநீரக நோய்கள், குடற்புண், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு, மூளைக்குருதியடைப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, A, ed. (July 2013). STANDARD FOR THE UNIFORM SCHEDULING OF MEDICINES AND POISONS (PDF). Therapeutic Goods Administration. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74241-895-7.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ https://www.mims.com/India/drug/search/Naproxen?page=1[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.rxlist.com