திஸ்கித்
திஸ்கித் | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள நூப்ரா பள்ளத்தாக்கில் திஸ்கித் கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°33′04″N 77°32′55″E / 34.551210°N 77.548478°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
தாலுக்கா | நூப்ரா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,760 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கணக்கெடுப்பு குறியீடு | 929 |
திஸ்கித் (Diskit) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தின், நூப்ரா வருவாய் வட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும்.[1][2]காரகோரம் மலைத்தொடரில் அமைந்த இக்கிராமத்தில் திஸ்கித் விகாரை உள்ளது. திஸ்கித் கிராமம், லே நகரத்திற்கு கிழக்கே 118 கிலோ மீட்டர் தொலவிலும், ஹன்டர் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. லே நகரம் மற்றும் தவுலத் பெக் ஓல்டியை இணைக்கும் துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை இக்கிராமம் வழியாகச் செல்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, திஸ்கித் கிராமம் 344 வீடுகளையும், 1760 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. எழுத்தறிவு 76.57% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை 1519 ஆகவுள்ளது [3]இக்கிராம மக்கள் கல்வி, அரசு வேலைகள், வங்கிச் சேவைகளுக்கு நூப்ராவிற்குச் செல்ல வேண்டும்.
சுற்றுலா
[தொகு]காரகோரம் மலைத்தொடரில் அமைந்த லடாக்கின் நூப்ரா பள்ளத்தாக்கில் அமைந்த திஸ்கித் கிராமம், ஆண்டு முழுவதும் இயங்கும் முக்கியச் சுற்றுலாத் தலமாகும். சியோக் ஆற்றின் கரையில் அமைந்த திஸ்கித் கிராமத்தில் பல விருந்தினர் விடுதிகளும், உண்வு விடுதிகளும் உள்ளது.[4]
உள்கட்டமைப்பு வசதிகள்
[தொகு]- கேந்திரிய வித்தியாலயம், நூப்ரா
- தாலுகா மருத்துவ மனை, நூப்ரா
- ஜம்மு காஷ்மீர் வங்கி கிளை
- லாம்டோன் மாதிரி மேனிலைப் பள்ளி
- அரசு பட்டப்படிப்புக் கல்லூரி, நூப்ரா
- பொதுப்பணித் துறை, நூப்ரா
இதனையும் காண்க
[தொகு]- தவுலத் பெக் ஓல்டி
- துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
- சியோக் ஆறு
- கல்வான் நதி
- பாங்காங் ஏரி
- உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு
- துர்புக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ Leh tehsils.
- ↑ "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). https://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls. பார்த்த நாள்: 2015-07-23.
- ↑ "Crazy Peaks".