உள்ளடக்கத்துக்குச் செல்

எப்-35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-35
எப்-35 மின்னல் II
எப்-35
வகை மறைந்து தாக்கும் முறை
பல்வகைத் தாக்குதல் வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் லொக்கீட் மார்ட்டின்
வடிவமைப்பாளர் ஐக்கிய அமெரிக்கா
முதல் பயணம் 15 டிசம்பர் 2006
அறிமுகம் 2016க்குப் பின்[1]
தற்போதைய நிலை ஆரம்ப உற்பத்தி, அமெரிக்காவில் பயிற்சிக்காக மட்டும்[2]
உற்பத்தி 2006–தற்போதும்
தயாரிப்பு எண்ணிக்கை 63[3]
அலகு செலவு எப்-35ஏ: ஐ.அ$197 மில்லியன் (2012)[4]
எப்-35பி: ஐ.அ$237.7மில்லியன் (2012)[5]
எப்-35சி: ஐ.அ$236.8மில்லியன் (2012)[5]
முன்னோடி லொக்கீட் மார்ட்டின் எக்ஸ்-35

எப்-35 அல்லது லொக்கீட் மார்டீன் எப்-35 மின்னல் II (Lockheed Martin F-35 Lightning II) என்பது ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, எல்லா காலநிலையிலும் மறைவான, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இந்த ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் தரைத்தாக்குதல் மற்றம் வான் போர் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இது மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. எப்-35ஏ மரபுமுறை புறப்படுத்தல் மற்றும் தரையிறக்கத்திற்காகவும், எப்-35பி குறுகிய புறப்படுத்தல் மற்றும் செங்குத்து தரையிறக்கத்திற்காகவும், எப்-35சி விமானந்தாங்கியின் கவண் எறிமுறை புறப்படுத்தல் மற்றும் தடுப்புப் பிடிப்பு திரும்பப்பெறல் முறைக்காகவும் வடிவமைக்கப்பட்டன. 31 சூலை 2015 அன்று, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு எப்-35பி சோதனையின் பின்னர் முதலாவது படைப்பிரிவு தயாராக உள்ளது என அறிவித்தது.[6][7] 2 ஆகத்து 2016 அன்று, ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-35ஏ விமாங்களைக் கொண்ட முதலாவது படைப்பிரிவு சண்டைக்குத் தயார் என அறிவித்தது.[8] இது லொக்கீட் மார்ட்டின் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களான நார்த்ரோப் குரூமன், பிராட் & விட்னி மற்றும் பிஏஈ சிஸ்டம்ஸ் உள்ளிடவர்களால் கட்டப்பட்டுகிறது.

விபத்துகள்

[தொகு]

2018 செப்டம்பர் 28 இல், எஃப்-35பி ஜெட் போர் விமானம் தென் கரொலைனாவில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் மோதுவதற்கு முன்னால் விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். இதுவே எஃப்-35 ரக விமானம் ஒன்றின் முதலாவது விபத்தாகும்.[9]

விவரக்கூற்று

[தொகு]
F-35பி வெட்டப்பட்ட காட்சி

தகவல் மூலம் லொக்கீட் மார்ட்டின் விவரக்கூற்றுக்கள், எப்-35 திட்டச் சுருக்கம்,[10][11] எப்-35 ஜேஎஸ்டிப்[12]

தொழில் நுட்பத்தகவல்கள்

  • அணி்: 1
  • நீளம்: 51.4 அடி (15.67 மீ)
  • சுழலியின் விட்டம்: 35 அடி சி - 51.5 அடி (15.7 மீ) (10.7 மீ)
  • உயரம்: 14.2 அடி பி - 14.2, சி: 14.9 அடி (4.54 மீ) (4.33 மீ)
  • இறக்கையின் பரப்பளவு: 460 அடி²[10] (42.7 மீ²)
  • வெற்று நிறை: 29,300 ப (13,300 கி)
  • ஏற்றப்பட்ட எடை: 49,540 ப[13] எப்-35பி: 47,996 ப (21,771 கி); எப்-35சி: 57,094 ப (25,896 கி)</ref>[14] (22,470 கி)
  • பறப்புக்கு அதிகூடிய எடை: 70,000 ப சி: 70,000, பி: 60,000 ப (27,000 கி)</ref> (31,800 கி)
  • சக்திமூலம்: 1 × பிராட் & விட்னி F135 பின்னெரிதல் சுழல்விசை விசிறி
    • உலர் தள்ளுதல்: 28,000 lbf[15] F-35B: செங்குத்து ஊந்துதல் 39,700 lbf (176 kN)</ref> (125 kN)
    • பின்னெரி கருவியுடன் தள்ளுதல்: 43,000  பவுண்ட்-ஆற்றல் (191 kN)
  • உள்ளக எரிபொருள் கொள்ளளவு: 18,480 ப (8,382 கி) எப்-35பி: 14,003 ப (6,352 கி); எப்-35சி: 20,085 ப (9,110 கி)</ref>

செயற்திறன்

  • கூடிய வேகம்: மாக்கெண் (1,200 mph, 1,930 km/h) (மாக் 1.61 சோதிக்கப்பட்டது)[16]
  • வீச்சு: 1,200 nmi (2,220 km) உள் எரிபொருள்
  • சண்டை ஆரை: 584 nmi[17] (1,080 km) உள் எரிபொருள்
  • சேவை மேல்மட்டம்: 60,000 ft[18] (18,288 m) (சோதிக்கப்பட்டது 43,000 ft)[19]
  • மேலேற்ற வீதம்: மறைவான தகவல் (பொதுவில் கிடைக்காது)
  • இறக்கை பளு: 91.4 lb/ft² (446 kg/m²)
  • தள்ளுதல்/நிறை: **With full fuel: 0.87
    • With 50% fuel: 1.07
  • g-Limits:g F-35B: 7.5 g, F-35C: 7.5 g</ref>

போர்க் கருவிகள்

  • துப்பாக்கிகள்: 1 × GAU-22/A Equalizer 25 mm
  • மேலதிக கொள்ளளவு: 6 × சிறகில் வெளிப் பகுதிகள் with a capacity of 15,000 lb (6,800 kg)[10][12] 2 உள் பகுதிகள் ஒவ்வொன்றும் 2 பகுதிகள்[10] மொத்த கொள்ளளவு 18,000 lb (8,100 kg)  மற்றும் பின்வரும் அமைப்பில் ஆயுதங்கள் அமைக்கப்படும்:
    • ஏவுகணைகள்: ** வான்-வான் ஏவுகணைகள்:
      • AIM-120 AMRAAM
      • AIM-9X
    • குண்டுகள்: *** Mark 84 bomb

பறப்பு மின்னணுவியல்

  • AN/APG-81
வேறுபாடுகள்
F-35A
CTOL
F-35B
STOVL
F-35C
CATOBAR
நீளம் 51.4 அடி (15.7 m) 51.3 அடி (15.6 மீ) 51.5 அடி (15.7 மீ)
சிறகு அகலம் 35 அடி (10.7 m) 35 அடி (10.7 m) 43 அடி (13.1 m)
சிறகு பரப்பு 460 அடி² (42.7 மீ²) 460 அடி² (42.7 மீ²) 668 அடி² (62.1 மீ²)
வெற்று நிறை 29,300 ப (13,300 கிகி) 32,000 ப (14,500 கிகி) 34,800 ப (15,800 கிகி)
உள்ளக எரிபொருள் 18,500 ப (8,390 கிகி) 13,300 ப (6,030 கிகி) 19,600 ப (8,890 கிகி)
அதிகபட்ச எடை 70,000 ப (31,800 கிகி) 60,000 ப (27,000 கிகி) 70,000 ப (31,800 கிகி)
தூரம் 1,200 nமீi (2,220 கிமீ) 900 nமீi (1,670 கிமீ) 1,400 nமீi (2,520 கிமீ)
சண்டை ஆரம்
உள்ளக எரிபொருளில்[20]
584 nமீi (1,082 கிமீ) 383 nமீi (709 கிமீ) 640 nமீi (1,185 கிமீ)
தள்ளுதல்/எடை
முழு எரிபொருளில்
50% fuel
0.87
1.07
0.90
1.04
0.75
0.91

மேற்கோள்கள்

[தொகு]
  1. "US Air Force sees delay in operational use of F-35." Reuters. March 12, 2012.
  2. King, Samuel Jr. "First F-35 arrives at Eglin." U.S. Air Force, 15 July 2011. Retrieved 20 July 2011.
  3. Houghton, Kimberley. "BAE Systems gets chunk of jet contract." பரணிடப்பட்டது 2016-08-20 at the வந்தவழி இயந்திரம் Union Leader, 5 January 2012. Retrieved 5 January 2012.
  4. "FY 2013 Budget Estimates" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், p. 01–1. U.S. Air Force, February 2012.
  5. 5.0 5.1 "Department Of The Navy Fiscal Year (FY) 2013 Budget Estimates, Aircraft Procurement Vol. I, BA 1–4." பரணிடப்பட்டது 2012-06-19 at the வந்தவழி இயந்திரம், pp. 1-29, 1-43, Department of the Navy, February 2012. Retrieved: 13 March 2012.
  6. Kedmey, Dan (31 July 2015). "New F-35 Fighter Jets Are Ready for Combat". Time. https://time.com/3980838/marines-f-35-fighter-jet/. 
  7. Cameron, Doug (31 July 2015). "Marines Say Costly F-35 Jet Fighter Is Finally Ready". The Wall Street Journal. https://www.wsj.com/articles/marines-say-costly-f-35-jet-fighter-is-finally-ready-1438367615. 
  8. Insinna, Valerie (2 August 2016). "Air Force Declares F-35A Ready for Combat". www.defensenews.com. Defense News. https://www.defensenews.com/story/breaking-news/2016/08/02/f35-ioc-air-force-operational-acc-combat/87948142/. 
  9. "F-35B Lightning II fighter jet crashes, pilot ejects in South Carolina". Stripes.com. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 28-09-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. 10.0 10.1 10.2 10.3 Davis, Brigadier General Charles R. "F-35 Program Brief." USAF, 26 September 2006. Retrieved 5 June 2010.
  11. "JSF Suite: BRU-67, BRU-68, LAU-147 – Carriage Systems: Pneumatic Actuated, Single Carriage." es.is.itt.com, 2009 [last update]. Retrieved: 24 June 2011.
  12. 12.0 12.1 "F-35 Joint Strike Fighter Media Kit Statistics." JSF.mil August 2004.
  13. Nativi, Andy. "F-35 Air Combat Skills Analyzed." Aviation Week, 5 March 2009."
  14. "F-35 variants." JSF. Retrieved: 22 August 2010.
  15. "The Pratt & Whitney F135". Jane's Aero Engines. Jane's Information Group, 2009. (subscription version, dated 10 July 2009).
  16. "F-35A Pushes to Mach 1.6" AviationWeek, 9 December 2011.
  17. "Pentagon Slackens Difficult-To-Achieve JSF Performance Requirements." Inside Defense. 1 March 2012.
  18. "LockheedMartin F-35B JSF." Airtoaircombat.com. Retrieved: 15 August 2009.
  19. "Lockheed Martin F-35 Flight Test and Production Progress Report." Lockheed Martin. February 23, 2012.
  20. Freeman, Ben, (7 March 2012), JSFail? Not When the Pentagon Grades the F-35 on a Curve பரணிடப்பட்டது 2012-07-24 at Archive.today, Defence Professionals GmbH, Retrieved 18 March 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்-35&oldid=3793881" இலிருந்து மீள்விக்கப்பட்டது