ராஷ்மிகாவின் ‛தி கேர்ள் பிரண்ட்' டீசர் வெளியீடு | மெய்யழகன் பார்த்து கண்ணீர் விட்டேன் - அனுபம் கெர் நெகிழ்ச்சி | சூப்பர் சிங்கர் மேடையில் ஒலித்த சிறுவனின் ஆசை; நிறைவேற்றிய லாரன்ஸ் | சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் எகிறியது! | விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல் | பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜி | புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் |
1980களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே.ரங்கராஜ். நெஞ்சமெல்லாம் நீயே, பொண்ணு புடிச்சிருக்கு, நிலவு சுடுவதில்லை, உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே, நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கடைசியாக 1992ம் ஆண்டு 'எல்லைச்சாமி' என்ற படத்தை இயக்கினார். சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார்.
தற்போது 31 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தை கணபதி பிச்சர்ஸ் சார்பாக மாணிக்கம் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், பூஜா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கே.ஆர்.விஜயா, சச்சு, நளினி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, அனு மோகன், சிங்கம்புலி, அமித் பார்கவ், வினோதினி, சுஜாதா, மாஸ்டர் விஷ்ணவா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.